Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அகமதாபாத் டூ லண்டன்.. நர்ஸ் ரஞ்சிதா குறித்து மோசமான பதிவு.. கேரளாவில் துணை தாசில்தார் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: லண்டன் வேலையை உதறிவிட்டு, கேரளாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர தயாரான நர்ஸ் ரஞ்சிதாவிற்கு அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து சென்ற விமான பயணம் இறுதி பயணமானது. நர்ஸ் ரஞ்சாவின் பேஸ்புக் பக்கத்தில் அவரை பற்றி சாதி ரீதியாகவும், அசிங்கமான கருத்துக்களையும் தெரிவித்ததாக துணை தாசில்தார் ஒருவரை கேரள அரசு இன்று சஸ்பெண்ட் செய்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான டிரீம்லைனர் விமானம் ஒன்று லண்டனுக்கு நேற்று பிற்பகல் புறப்பட்டது. விமானத்தில் 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். புறப்படுவதற்கு தேவையான அனைத்து நடைமுறைகளுக்கு பின்னர் சரியாக 1.39 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது.

Kerala Deputy Tahsildar suspended for making comments about London nurse Ranjitha

விமானம் அஹமதாபாத் விமான நிலையத்தை கடந்து பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் சுமார் 825 அடி உயரத்திற்கு சென்றது. ஆனால் அதற்கு மேல் விமானம் பறக்க முடியாமல் சட்டென கீழ்நோக்கி வந்தது.. விமானியிடம் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு 'மே டே அழைப்பு' வந்தது. அதை ஏற்று கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், மீண்டும் விமானியை தொடர்பு கொள்ள முயன்ற போது, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விமானம் விபத்து

அடுத்த ஒரு சில நிமிடத்தில், அகமதாபாத் விமான நிலையம் அருகே உள்ள மெகானி என்ற இடத்தில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த பி.ஜே. தனியார் மருத்துவக் கல்லூரியின் விடுதிக்கட்டிடத்தில் மோதி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் பயணிகள் உள்பட 241 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் ரஞ்சிதாவும் உயிரிழந்தார்.

செவிலியர் ரஞ்சிதா

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி புல்லாடு பகுதியை சேர்ந்த 39 வயதாகும் ரஞ்சிதா நாயர் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில் 9 ஆண்டுகள் செவிலியராக பணியாற்றி வந்தார். பின்னர் கடந்த ஓராண்டுக்கு முன்பு லண்டனில் நர்சாக பணியில் சேர்ந்திருக்கிறார். இந்த நிலையில் ரஞ்சிதாவுக்கு கேரள அரசு பணியாளர் தேர்வாணயம் மூலம் கோழஞ்சேரி அரசு மருத்துவமனையில் வேலை கிடைத்தது.

அகமதாபாத் விமானம்

இதற்காக கேரளா வந்த அவர் லண்டனில் பணியாற்றிய மருத்துவமனைக்கு சென்று ராஜினாமா கடிதம் கொடுக்க முடிவு செய்திருக்கிறார. இதற்காக அவர் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு விமானத்தில் சென்ற போது தான் விபத்தில் சிக்கி நர்ஸ் ரஞ்சிதா உயிரிழந்தார். உயிரிழந்த கேரள நர்ஸ் ரஞ்சிதாவுக்கு, கணவர், 15 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கணவர் மற்றும் மகன்களை பிரிந்துதான் ஓமனில் பணியாற்றி வந்தார். தனது குடும்பத்தை பொருளாதார ரீதியாக தாங்கி வந்தார். புற்றுநோயில் பாதித்த தாயை காப்பாற்றினார். மொத்த குடும்பத்திற்கும் பலமாக இருந்துள்ளார் ரஞ்சிதா.

லண்டன் வேலை

கடந்த ஓராண்டாக லண்டனில் நர்ஸ் வேலை செய்த ரஞ்சிதா, கடந்த 3 நாள் முன்புதான் சொந்த ஊருக்கு வந்துள்ளார். புதிய வீடு கட்டி வந்த ரஞ்சிதா, தனது வீட்டை பார்வையிடவே வந்திருக்கிறார். அப்படி வந்தவருக்கு கேரளா அரசின் சுகாதார துறையில் நர்ஸ் வேலை கிடைத்துள்ளது. இதையடுத்து லண்டனில் வேலையை உதறிவிட விரும்பினார்.

ராஜினாமா செய்ய முடிவு

இதற்காக மீண்டும் லண்டன் சென்று அங்கு ராஜினாமா கடிதம் அளித்து விட்டு, சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு திரும்ப விரும்பியிருக்கிறார். இதற்காக அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லும் விமானத்தில் ஏறி இருக்கிறார். அந்த பயணம் தான் நேற்று இறுதி பயணமாக அமைந்திருக்கிறது. இந்த தகவல்களை பஞ்சாயத்து உறுப்பினர் ஜான்சன் தாமஸ் கூறியிருந்தார்.

ரஞ்சிதா குறித்து கருத்து

இதனிடையே அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த நர்ஸ் ரஞ்சிதாவின் பேஸ்புக் பக்கத்தில் மோசமான கருத்துக்கள் பதிவிடப்பட்டிருந்தது. கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளரிகுண்டு தாலுகாவின் துணை தாசில்தார் ஏ. பவித்ரன் என்பவர் ரஞ்சிதாவின் பேஸ்புக் பக்கத்தில் சாதி ரீதியாகவும், ஆபாசமாகவும் கருத்துக்களை பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்வினை வந்த உடன், துணை தாசில்தார் பவித்ரன் கருத்துக்களை திரும்ப பெற்றார்.

துணை தாசில்தார் பவித்ரன் சஸ்பெண்ட்

எனினும் துணை தாசில்தார் பவித்ரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரளாவில் பலர் வலியுறுத்தினார்கள். இதையடுத்து கேரள மாநில வருவாய் அமைச்சர் கே. ராஜன், துணை தாசில்தார் பவித்ரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். செவிலியரைப் பற்றிய அவரது பேஸ்புக் பதிவு மிகவும் கொடூரமானது. இதுபற்றி அரசின் கவனத்திற்கு வந்த உடனே அவரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டதாக அமைச்சர் கே ராஜன் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+