கிள்ளியூர் தொகுதி.. காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமாருக்கு 3 மாதம் சிறை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
குமரி: கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம் எல் ஏவான ராஜேஷ்குமாருக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புறம்போக்கு நிலத்தை மீட்க சென்ற அதிகாரிகளை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ராஜேஷ்குமார் உள்பட 3 பேருக்கு தலா 3 மாதம் ஜெயில் மற்றும் தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.
குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜேஷ்குமார். இவர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். ராஜேஷ்குமார் மீது அதிகாரிகளை தாக்கியதாக அம்மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு மிடாலம் பகுதியில் புறம்போக்கு நிலத்தை மீட்பதற்காக அதிகாரிகள் வந்துள்ளனர். அப்போது அந்த அதிகாரிகளை ராஜேஷ்குமார் உள்பட 3 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்த நிலையில் காங்கிரஸ் எம் எல் ஏ ராஜேஷ்குமார் உள்பட 3 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் 3 பேருக்கும் தலா ரூ.100 அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications