கொள்ளையடிக்க வந்த இடத்தில் சபலம்.. அர்த்த ராத்திரியில் 24 வயது திருடனுக்கு வந்த ஆசை.. கடைசியில் கம்பி
குமரி: குமரி மாவட்டத்தில் கொள்ளையடிப்பதற்காக வந்த இடத்தில் 24 வயது இளைஞர் செய்த காரியம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அர்த்த ராத்திரியில் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த திருடன் அங்கு பீரோவில் நகை பணம் எதாவது இருக்கிறதா என்று தேடிப்பார்த்தார். ஆனால் பெரிய அளவில் பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து மற்றொரு அறையில் தேடும் போது, பெண் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்ததை பார்த்து சபலம் அடைந்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளது. அர்த்த ராத்திரியில் அந்த இளைஞர் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் தற்போது சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.

கதவை உடைத்து உள்ளே புகுந்தார்
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள வீட்டில் மீனவர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 36 வயதில் மனைவி இருக்கிறார். நேற்று முன் தினம் மீனவர் மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றுவிட்டார். வீட்டில் அவரது மனைவி மட்டும் இருந்தார். இரவு சாப்பிட்டுவிட்டு அவர் கதவை அடைத்துவிட்டு தூங்கிவிட்டார்.
இந்த நிலையில் நள்ளிரவில் கொள்ளையன் ஒருவர் அவரது வீட்டை நோட்டமிட்டுள்ளார். வீட்டில் ஆண்கள் அணியும் செருப்பு எதுவும் இல்லாததால், தைரியமாக மாடியில் உள்ள கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே சென்றுள்ளார். பின்னர் தான் கொண்டு வந்த பொருட்களை வைத்து பீரோவை உடைத்தார். ஆனால் பீரோவில் பெரிய அளவில் நகை பணம் இல்லை.
பெண்ணிடம் சில்மிஷம்
இதனால் ஏமாந்து போன கொள்ளையன் வேறு எதாவது பெரிய பொருள் கிடைத்துவிடாதா என வீடு முழுவதும் அங்குலம் அங்குலமாக தேடிப்பார்த்தார். ஆனால் அப்போது பெரிதாக கிடைக்கவில்லை. இதையடுத்து வீட்டில் இருந்த மற்றொரு அறைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த அறையில் பெண் கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். இதை பார்த்ததும் சபலம் அடைந்து அந்த திருடன் நைசாக கிட்டே சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் தான் கொண்டு வந்த கத்திரிக்கோலை எடுத்து பெண்ணின் நைட்டியை வெட்டியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் உடனடியாக கத்தி கூச்சலிட்டார். இதையத்து பெண்ணின் தாலி சங்கிலியை பறிக்க முயன்றார். எனினும் பெண் கத்தி சத்தமிட்டதால் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடினார். பெண்ணின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்தனர்.
பிடித்து கைது செய்த போலீசார்
அவர்களும் அந்த கொள்ளையனை பிடிக்க முயற்சி செய்தனர். எனினும் அவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு வந்த போலீசார் அப்பகுதியில் பதுங்கியிருந்த கொள்ளையனை பிடித்து கைது செய்தனர். இதில் அவரது பெயர் சகாயஜோஸ் (வயது 24) என தெரியவந்தது.
போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அந்த இளைஞர் கூறியதாவது:
"நான் வேலைக்கு செல்லவில்லை. சீக்கிரம் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டேன். அதற்காக தான் திருடும் தொழிலில் ஈடுபட்டேன். நேற்று முன் தினம் அந்த பெண்ணின் வீட்டை நோட்டமிட்டபோது வீட்டின் முன் ஆண்கள் அணியும் செருப்பு இல்லை. எனவே தைரியமாக மாடிக்கு சென்று கடப்பாரையால் கதவை உடைத்து உள்ளே சென்றேன்.
சிறையில் அடைப்பு
பீரோவில் பணம், நகை இல்லாததால் அருகிலுள்ள அறைக்கு சென்றேன். அப்போது அங்கு படுத்திருந்த பெண்ணைப் பார்த்ததும் சபலம் அடைந்து இப்படி செய்துவிட்டேன். அவர் கத்தி கூச்சலிட்டதால் மாட்டிக்கொள்வேன் என பயந்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினேன். எனினும் போலீசார் என்னை பிடித்து விட்டனர்" என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து வைத்தனர்.
-
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications