Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“டபுள் கேம்” ஆடிய வக்கீல்.. ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டிக் கொன்று எரித்த நபர்.. குமரியில் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே "டபுள் கேம்" ஆடியதாக வழக்கறிஞர் ஒருவர் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே ஒருவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டது வழக்கறிஞர் கிறிஸ்டோஃபர் சுபி (50) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எதிர் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி வழக்கறிஞர் கிறிஸ்டோபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

kanyakumari lawyer crime

திருப்பு விசாகம் பகுதியைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர், வழக்கறிஞர் கிறிஸ்டோஃபர் சுபியை தான் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து எரித்ததாக ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் சரணடைந்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

இசக்கி முத்து, ஒரு வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் கிறிஸ்டோஃபரை நாடியுள்ளார். வழக்கறிஞர் கிறிஸ்டோஃபர், தொகையைப் பெற்றுக்கொண்டு வழக்கை நடத்தி வந்துள்ளார். இந்த வழக்கின் போக்கு கடந்த சில மாதங்களாக இசக்கிமுத்துவுக்கு சாதகமாக அமையவில்லை. இது குறித்து அதிருப்தி அடைந்த இசக்கிமுத்து தனது வழக்கறிஞரான கிறிஸ்டோஃபர் சுபியிடம் வழக்கு தொடர்பான நடவடிக்கை குறித்து கேட்டுள்ளார்.

ஆனால் வழக்கறிஞர் கிறிஸ்டோஃபர் சரிவர பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இதையடுத்து, இசக்கிமுத்து சந்தேகமடைந்து, வழக்கறிஞர் கிறிஸ்டோபரின் நடவடிக்கைகளை ரகசியமாக நோட்டம் விட்டுள்ளார். அதில், வழக்கறிஞர் கிறிஸ்டோஃபர், தன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு, எதிர் தரப்புக்கு சாதகமாக செயல்படுவது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, வழக்கு தொடர்பான ஆவணங்களை தருமாறு கிறிஸ்டோஃபரிடம் கேட்டுள்ளார் இசக்கிமுத்து. இசக்கி முத்து வீட்டில் இருவரும் மது அருந்தியபடியே பேசிக் கொண்டிருந்தபோது வழக்கறிஞர் கிறிஸ்டோஃபருக்கும் அவரது கட்சிக்காரரான இசக்கிமுத்துவுக்கும் இடையே வழக்கு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது கடும் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து, வழக்கறிஞர் கிறிஸ்டோஃபரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர், உடலை பீமநேரி அருகே உள்ள குளத்தின் கரையோரம் பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார்.

தனக்கு ஆதரவாக வழக்கு நடத்துவதாக கூறிக் கொண்டு, எதிர் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டு டபுள் கேம் ஆடியதால் வழக்கறிஞர் கிறிஸ்டோஃபர் சுபியை வெட்டிக் கொலை செய்து எரித்ததாக ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் இசக்கிமுத்து சரணடைந்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு இசக்கிமுத்துவை அழைத்துச் சென்ற போலீசார் வழக்கறிஞரின் உடலை கைப்பற்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலையாளி இசக்கிமுத்துவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+