தாம்பரம்-நாகர்கோவில் தினசரி ரயில்.. கன்னியாகுமரி- நாகர்கோவில் 3-வது ரயில் பாதை.. விஜய் வசந்த் கோரிக்கை
கன்னியாகுமரி: காலி சரக்கு ரயில்கள் செல்ல கன்னியாகுமரி- நாகர்கோவில் இடையே 3-வது ரயில் பாதை அமைக்க வேண்டும், மங்களூர்-திருவனந்தபுரம் ரயிலை கன்னியாகுமரி வரையும், ஹவுரா-திருச்சி ரயிலை கன்னியாகுமரி வரையும், நெல்லை வந்தேபாரத் ரயிலை நாகர்கோவில் வரையும் நீட்டிப்பு செய்ய வேண்டும். தாம்பரம்-நாகர்கோவில், ராமேசுவரம்-கன்னியாகுமரி ரயில்களை தினசரி சேவையாக மாற்ற வேண்டும் என்று கன்னியாகுமரி நாடாளுமன்ற எம்.பி. விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற எம்.பி. விஜய் வசந்த், மத்திய ரயில்வேத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார். அவற்றின் விவரங்களை பார்ப்போம்.. "நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம்-வேளாங்கண்ணி வாரந்திர ரயில், கன்னியாகுமரி-ஹைதராபாத் தினசரி விரைவு ரயில் ஆகிய புதிய ரயில்களை இயக்க வேண்டும். புதியதாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள சென்னை அம்ரித் பாரத் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்.

புனலூர்-மதுரை ரயிலை காரைக்கால் வரையும், மங்களூர்-திருவனந்தபுரம் ரயிலை கன்னியாகுமரி வரையும், ஹவுரா-திருச்சி ரயிலை கன்னியாகுமரி வரையும், நெல்லை வந்தேபாரத் ரயிலை நாகர்கோவில் வரையும் நீட்டிப்பு செய்ய வேண்டும். தாம்பரம்-நாகர்கோவில், ராமேசுவரம்-கன்னியாகுமரி ரயில்களை தினசரி சேவையாக மாற்ற வேண்டும். காந்திதாம் விரைவு ரயில் மற்றும் ஜாம்நகர் ரயில் குழித்துறையிலும், புனலூர்-மதுரை ரயில் பள்ளியாடியிலும், திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி இரணியலிலும் நின்று செல்ல வேண்டும்.
இரட்டை ரயில் பாதை பணிகளை துரிதப்படுத்த வேண்டும். கன்னியாகுமரியில் மின்சார லோகோ ஷெட், நாகர்கோவில் டவுன் மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையத்திற்கு செல்ல இரண்டாவது நுழைவு வாயில், நாகர்கோவில் டவுன், இரணியல் மற்றும் குழித்துறை ரயில் நிலையங்களில் கூடுதல் நடைமேடைகள், மோசமான நிலையில் காணப்படும் குழித்துறை ரயில் நிலையம் செல்லும் சாலையை செப்பனிடுதல், மழை காலங்களில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்படுவதை தடுக்க தகுந்த நடவடிக்கைகள், பயணிகள் வசதி கருதி ரயில் நிலையங்களின் மேம்பாடு ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
ராமேசுவரம்-தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி கடற்கரை ரயில் பாதை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை நடைமுறைபடுத்த வேண்டும். அது போன்று அறிவிக்கப்பட்டுள்ள அங்கமாலி-எருமேலி-விழிஞ்ஞம் ரயில் பாதையின் ஒரு பகுதியை கன்னியாகுமரி மாவட்டம் நெட்டா-குலசேகரம்-பூதப்பாண்டி வழியாக ஆரல்வாய்மொழி சென்றடையும் விதமாக நீட்டிப்பதற்கு ஆய்வு நடத்த வேண்டும். அதுபோன்று காலி சரக்கு ரயில்கள் செல்ல கன்னியாகுமரி- நாகர்கோவில் இடையே 3-வது ரயில் பாதை அமைக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications