வீடு இல்ல முதல்வரே! உருக்கமாக கேட்ட வேலம்மாள் பாட்டி.. உடனே சென்ற அதிகாரிகள் - நேரில் விசாரிப்பு
கன்னியாகுமரி: கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு வழங்கிய ரூ.2000 நிவாரணத் தொகையுடன் போஸ் கொடுத்து பிரபலமான வேலம்மாள் பாட்டி, முதலமைச்சர் தனக்கு வீடு வழங்குமாறு கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்ட நிலையில் இன்று அவரை நேரில் சென்று கோட்டாட்சியர் விசாரித்து இருக்கின்றனர்.
Recommended Video
கொரோனா ஊரங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 2 தவணைகளாக ரூ.4,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொரோனா இரண்டாம் கட்ட நிவாரணம் வழங்கப்பட்டது.
ரேஷன் அட்டைக்கு தலா ரூ.2,000 நிவாரணத் தொகை மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை பொதுமக்கள் பெற்றுச் சென்றனர். இந்த தொகுப்பை பெற்றுக்கொண்ட வேலம்மாள் என்ற பாட்டி சிரித்தபடி நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.

வைரல் புகைப்படம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்து இருக்கும் கீழகலுங்கடிப்பகுதியை சேர்ந்தவர் 91 வயதான வேலம்மாள் பாட்டி. பணம் மற்றும் பரிசுத் தொகுப்புடன் முகம் மலர சிரித்துக்கொண்டு போஸ் கொடுத்த புகைப்படத்தை கன்னியாகுமரியை சேர்ந்த ஜாக்சன் ஹெர்பி புகைப்பட பத்திரிகையாளர் எடுத்திருந்தார்.

பகிர்ந்த முதலமைச்சர்
இந்த புகைப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார். இதன் மூலமாக ஒரே நாளில் பிரபலமானார் வேலம்மாள் பாட்டி. இந்த புகைப்படத்தை எடுத்த ஜேக்சன் ஹெர்பியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்துக்கு நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தார். இந்த நிலையில் கடந்த 2022 மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சென்றார்.

ஸ்டாலினுடன் சந்திப்பு
அங்கு வேலம்மாள் பாட்டியை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடல்நலன் குறித்து விசாரித்தார். அப்போது வேலம்மாள் பாட்டி முதியோர் உதவித் தொகை கிடைக்காமல் இருந்ததாகவும், தற்போது அதை வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். அத்துடன் தனக்கு வீடு வழங்க வேண்டும் என்று வேலம்மாள் பாட்டி வைத்த கோரிக்கையையும் முதலமைச்சர் ஏற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகின.

தெருவில் நிற்கிறேன்
இந்த நிலையில், வேலம்மாள் பாட்டியின் புகைப்படத்தை எடுத்த புகைப்பட கலைஞர் ஜாக்சன் ஹெர்பி இன்று ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதில், பேசும் வேலம்மாள் பாட்டி, "முதலமைச்சர் ஐயா! நீங்க வீடு தாங்க என்று சொன்னேன். கலெக்டரை பார்க்க சென்றேன். அவரும் தருவதாக சொன்னார். இதுவரை தரவில்லை. தெருவில் நிக்கிறேன் ஐயா!" என்று வேதனை தெரிவித்துள்ளார்.

ஜாக்சன் ஹெர்பி விளக்கம்
இது தொடர்பாக ஜாக்சன் ஹெர்பியிடம் ஒன் இந்தியா தமிழ் சார்பாக விளக்கம் கேட்டோம். அப்போது பேசிய அவர், "முதலமைச்சர் கன்னியாகுமரிக்கு வருகை தந்தபோது வீடு வழங்குமாறு கேட்ட வேலம்மாள் பாட்டியிடம் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைத்தும் வீடு கிடைக்கவில்லை. தற்போது பாட்டி வசித்து வரும் வாடகை வீடு புறம்போக்கு நிலத்தில் இருப்பதாக கூறி இடிக்கப்போவதாக அறிவித்து உள்ளார்கள். இதனால் பாட்டி தங்குவதற்கே இடம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது." என்றார்.

நேரில் சென்ற அதிகாரிகள்
வேலம்மாள் பாட்டி தங்கி இருக்கும் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டு இருந்த சுமார் 45 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்படப்போவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வேலம்மாள் பாட்டி விடுத்த கோரிக்கை ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் வேலம்மாள் பாட்டியை நேரில் சென்று சந்தித்து அவரது தேவைகளை கேட்டறிந்தார்.
-
பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications