களைகட்டும் ஜோடோ யாத்திரை! எதிர்பார்க்கவே இல்லை.. ராகுலை யார் சந்திச்சாங்கன்னு பாருங்க! என்ன நடந்தது?
கன்னியாகுமரி: பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை சந்திக்க கன்னியாகுமரியில் மக்கள் பலர் குவிந்து வருகின்றனர்.
பாரத் ஜுடோ யாத்திரையின் 2வது நாள் பயணத்தை இன்று அதிகாலை தொடங்கினார் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி. பயணத்தை தொடங்கும் முன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.
அகஸ்தீஸ்வரத்தில் இன்று இரண்டாவது நாள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.இன்று 20-30 கிமீ தூரத்திற்கு ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் காந்தியுடன் இன்று 50 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் யாத்திரை செய்கின்றனர். காங்கிரஸ் நிர்வாகிகள் இதற்காக களமிறக்கப்பட்டுள்ளனர். பல ஊர்களில் இருந்து காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுலுடன் பயணம் செய்ய உள்ளனர்.

ராகுல் காந்தி
இந்த பயணத்தில் ராகுல் காந்தியுடன் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள், காங்கிரஸ் கட்சி எம்பி ஜோதிமணி ஆகியோர் உடன் இருந்தனர். இரண்டாம் நாள் பயணம் என்பதால் செய்தியாளர்கள் பலர் இருந்தனர். ராகுல் காந்தி முன் வரிசையில் நடந்து வந்தார். ராகுல் காந்தியை சுற்றி அரண் போல தொண்டர்கள் இருந்தனர். ராகுல் காந்தியை சுற்றி இவர்கள் கைகளை வைத்து கோர்த்து பாதுகாப்பாக நின்றனர். ஆனாலும் மக்கள் இவரிடம் பேச அனுமதிக்கப்பட்டனர்.

பயணம்
ராகுல் காந்தி செல்லும் வழியில் ஆங்காங்கே மக்களை சந்தித்தார். அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இவருக்கு தமிழ் தெரியாது. குமரியில் பெரும்பாலானோருக்கு இந்தி தெரியாது என்பதால் அவர்களிடம் ராகுல் காந்தி ஆங்கிலத்தில் பேசினார். ஜோதிமணி உள்ளிட்டோர் இவர்களுக்கு மொழிபெயர்த்தனர். அப்போதுதான் திடீரென ராகுல் காந்தியை நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினர் சந்தித்தனர்.

அனிதா
அனிதாவின் சகோதரர் ராகுல் அருகே சென்று அவருடன் பேசினார். கையில் நீட் தொடர்பான கோரிக்கை மனு ஒன்றை வைத்து இருந்தார். நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவர் இந்த மனுவை கொடுத்தார். ராகுல் காந்தி அவரின் கோரிக்கையை கேட்டுக்கொண்டார். அதோடு ராகுல் காந்தியின் அவரின் குடும்ப நிலை குறித்து அனிதாவிடம் சகோதரரிடம் பேசினார். நடந்தபடியே இருவரும் உரையாடிக்கொண்டு இருந்தனர்.

ராகுல் காந்தி யாத்திரை
ராகுல் காந்தி முன்பே தமிழ்நாட்டில் லோக்சபா பிரச்சாரத்தின் போது நீட் தேர்விற்கு எதிராக பேசியது குறிப்பிடத்தக்கது.இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்றுதான் வெளியானது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு எழுதியவர்களில் தமிழ்நாட்டில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருத்தேவ் விநாயகா என்ற மாணவர் 705 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் முதலிடம் பெற்றுள்ளார். இந்திய அளவில் அவர் 30வது இடத்தை பிடித்துள்ளார். ஹரிணி என்ற தமிழ்நாடு மாணவி தமிழ்நாட்டில் இரண்டாம் இடமும். தேசிய அளவில் 43வது இடமும் பெற்றுள்ளார். நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த மாணவி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications