பொது இடத்தில் மது அருந்தியவர்களை தட்டிக் கேட்டவர்... மது பாட்டிலால் குத்திக் கொலை
Recommended Video

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே முன்னாள் கருவூல ஊழியர் மது பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை செட்டித் தெருவை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (65). இவர் மாவட்ட கருவூல ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சனிக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்ற முருகேசன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடினர்.

இந்நிலையில், வீட்டின் அருகில் உள்ள குளத்தின் கரையில் குடல் சரிந்த நிலையில் பிணமாக கிடந்ததை உறவினர்கள் கண்டனர். மேலும் இது குறித்து அவர்கள் சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், முருகேசன் பிணமாக கிடந்த இடத்தின் அருகே இருந்து ரத்த கரையுடன் இருந்த உடைந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் பொது இடத்தில் மது அருந்தியதை முருகேசன் தட்டி கேட்டதால் மர்ம நபர்கள் அவரை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. கன்னியாகுமரி டி. எஸ். பி., பாஸ்கரன் தலைமையிலான போலீசார், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளில் பதிவான மர்ம நபர்கள் உருவத்தை கொண்டு தேடி வருகின்றனர்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications