மீண்டும் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. தேர்தல் ரிசல்ட்டுக்கு முன்பாக குமரி முனையில் தியானம்!
கன்னியாகுமரி: பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு தியானம் செய்ய வருகை தர உள்ளார் பிரதமர் மோடி.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதியும், 3 ஆம் கட்ட தேர்தல் மே 7ஆம் தேதியும், 4 ஆம் கட்ட தேர்தல் 13 ஆம் தேதியும், 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 20ஆம் தேதியும் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 25ஆம் தேதியும் நடந்து முடிந்துள்ளது.

7 ஆம் கட்ட மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி 57 லோக்சபா தொகுதிகளில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் வரும் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாக பல முறை தமிழ்நாடு வந்து சென்றார் பிரதமர் மோடி. முதற்கட்ட தேர்தல் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் நடைபெற்ற நிலையில் கோவை, சென்னையில் பேரணி மேற்கொண்டார் பிரதமர் மோடி.
தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தொடர்ச்சியாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் பிரதமர் மோடி. இந்நிலையில், மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் மே 30, 31, ஜூன் 1 ஆகிய 3 நாட்களில் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மே 29ஆம் தேதியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் மே 30ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மே மாதம் 30 ஆம் தேதி அன்று டெல்லியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரிக்கு வருகிறார். கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி அன்று மாலை படகு மூலம் விவேகானந்தர் நினைவுப் பாறைக்கு சென்று தியான மண்டபத்தில் தியானம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 1ஆம் தேதி தியானத்தை முடித்துவிட்டு பின்னர் டெல்லி புறப்பட்டு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து பிரதமருக்கான பாதுகாப்பு அதிகாரிகள் கன்னியாகுமரியில் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிவின் போது பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் சென்று தியானம் செய்தது குறிப்பிடத்தக்கது.
உ.பி மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களில் வழிபாடு செய்தார். ராமேஸ்வரத்தில் ராமகிருஷ்ணா மடத்திற்கு சென்று சற்று ஓய்வெடுத்த பிரதமர் மோடி, அங்கிருந்து அக்னி தீர்த்தக் கடலுக்குச் சென்று புனித நீராடினார். ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு புனித நீரை எடுத்துச் சென்றார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications