கன்னியாகுமரியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு படகில் பயணம்.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
திரௌபதி முர்மு இன்று கன்னியாகுமரி வந்துள்ளார்.
கன்னியாகுமரி: இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று கன்னியாகுமரி வந்துள்ளார். இதனால் அங்கு முழுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.
நமது நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக உள்ளவர் திரௌபதி முர்மு. குடியரசுத் தலைவராக இருந்த ராம் கோவிந்த் பதவிக்காலம் கடந்தாண்டு நிறைவடைந்த நிலையில் திரௌபதி முர்மு குடியரசு தேர்தலில் வென்றார்.
இதனிடையே குடியரசு திரௌபதி முர்மு கடந்த மாதம் ஜனாதிபதியான பிறகு முதல்முறை மதுரை வந்திருந்தார். மதுரையில் பல்வேறு இடங்களையும் அவர் சுற்றிப் பார்த்தார்.

கன்னியாகுமரி வருகை
இதனிடையே இப்போது இரண்டு நாள் பயணமாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேரளா சென்றுள்ளார். கேரளாவில் கொச்சியில் அமைந்துள்ள ஐஎன்எஸ் துரோணாச்சாரியா போர்க்கப்பலில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். மேலும், ஐஎன்எஸ் துரோணாச்சாரியாவுக்கு குடியரசுத் தலைவர் பதக்கத்தையும் அவர் வழங்கினார்.. இதனிடையே பயணத்தின் ஒரு பகுதியாக அவர் கன்னியாகுமரி வந்தார்.

கேரளாவில் இருந்து
இன்று அவர் கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கிருந்து பாதுகாப்பாக கார் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகு தளத்துக்கு ஜனாதிபதி சென்றார். கன்னியாகுமரியில் ஜனாதிபதியை ஆளுநர் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் வரவேற்றனர். அங்கிருந்து தனி படகு மூலம் அவர் நினைவு மண்டபத்திற்குச் சென்றார்.

தனிப்பட மூலம்
இதையடுத்து மீண்டும் தனிப்படகு மூலம் கரைக்குத் திரும்பும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கார் மூலம் விவேகானந்த கேந்திர வளாகத்திற்குச் செல்கிறார். அங்குள்ள ராமாயண கண்காட்சி கூடத்தையும் திரௌபதி முர்மு பார்வையிடுகிறார். அங்குள்ள பாரதமாதா கோயிலிலும் வழிபாடு நடத்துகிறார். இதையடுத்து தனது பயணத்தை முடித்துக் கொள்ளும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கார் மூலம் அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்று, அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார்.

ட்ரோன் பறக்கத் தடை
குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் போலீசார் வாகன ஒத்திகையை நடத்தினர். மேலும், அப்பகுதி முழுக்க வெடிகுண்டு வல்லுநர்களும் சோதனை நடத்தினர். மேலும், குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு இன்று குமரியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், அவர் தீவிர ரோந்து பணிகளில் இறங்கியுள்ளார்.

சுற்றுலாப் பயணிகள்
குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரி கடற்கரை, திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு மூன்று மணி நேரம் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகக் காலை 8 முதல் மாலை 5 மணிவரை விவேகானந்தர் பாறைக்குப் படகு இயக்கப்படும் நிலையில், இன்று மட்டும் குடியரசுத் தலைவர் கன்னியாகுமரியிலிருந்து கிளம்பும் வரை படகு சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications