Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தரமான சம்பவம்".. மிரளும் பாஜக.. அசத்தும் காங்., ஸ்காட் காலேஜில் இன்று ராகுல் 3வது நாள் நடைபயணம்

3வது நாள் நடைபயணம் மேற்கொள்ளும் ராகுலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: இன்று காலை 6 மணிக்கு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபயணத்தை தொடங்கி உள்ள ராகுலுக்கு பொதுமக்களும், காங்கிரஸ் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், தொண்டர்களை உற்சாகமடைய செய்யும் விதத்திலும் இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரியில் நடைபயணம் துவங்கி உள்ளார் ராகுல் காந்தி..

கன்னியாகுமரியில் இருந்து 12 மாநிலங்கள் வழியாக 150 நாட்களில் 3500 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையவுள்ளார்

 தேசிய கொடி

தேசிய கொடி

முதல்நாள் நடைபயணத்தில், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரிக்கு வந்து கேரவன் வேனில் தங்கினார். இதைப்போல் அவருடன் நடைபயணம் மேற்கொள்ளும் மேலும் 119 பேரும் கேரவனிலே தங்கினர். 2-வது நாள் நடைபயணத்தை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இருந்து நேற்று காலை 7.15 மணியளவில் ராகுல் காந்தி தொடங்கினார். தேசியக் கொடியை ஏந்தியவாறு நடைபயண குழுவினருடன் ராகுல் நடைபயணம் மேற்கொண்டார்.

 ஸ்காட் கல்லூரி

ஸ்காட் கல்லூரி

பிறகு, கொட்டாரம் சந்திப்பில் இருந்து, பொற்றையடி, ஈத்தங்காடு, வழுக்கம்பாறை வழியாக காலை 10.30 மணியளவில் சுசீந்திரம் எஸ்எம்எஸ்எம் பள்ளியை அடைந்தார்... மாலை 4 மணியளவில் சுசீந்திரத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி மற்றும் குழுவினர் நாகர்கோவில் கோட்டாறு சவேரியார் ஆலய சந்திப்பு வழியாக மாலையில் ஸ்காட் கல்லூரியை அடைந்தனர். இந்நிலையில், இன்று 3வது நாள் நடைபயணத்தை நாளை ராகுல் காந்தி, ஸ்காட் கல்லூரியில் இருந்து தொடங்குகிறார்...

 மார்த்தாண்டம்

மார்த்தாண்டம்

பார்வதிபுரத்தில் இருந்து திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியான சுங்காங்கடை, வில்லுக்குழி வழியாக புலியூர்குறிச்சியை மதியம் அடைகிறார்... பிறகு அங்கிருந்து தக்கலை மேட்டுக்கடை மசூதி வழியாக முளகுமூடு புனித மேரி ஐசிஎஸ்இ பள்ளியை அடைகிறார். நாளை 4வது நாள் நடைபயணம் 10ம் தேதி முளகுமூட்டில் இருந்து துவங்குகிறது.. மார்த்தாண்டம் நேசமணி கல்லூரியை மதியம் அந்த நடைபயணம் அடைகிறது... அங்கிருந்து மாலையில் குழித்துறை சந்திப்பு, படந்தாலுமூடு வழியாக கேரள பகுதியான தலைச்சன்விளையை அடைகிறது.

 செல்பி - தேசிய கொடி

செல்பி - தேசிய கொடி

இந்த நடைபயணங்களில், சாலையோரம் பொதுமக்கள், மாணவ, மாணவியர்களும் ராகுலை வரவேற்கவும், வாழ்த்து தெரிவிக்கவும் குவிந்து வருகின்றனர்.. சாலையின் இரு பகுதியிலும் திரண்டிருந்த மக்களை பார்த்து ராகுல்காந்தி கை கூப்பியும், கையசைத்தும், பயணம் மேற்கொண்டு வருகிறார்.. ராகுல் அவர்களின் அருகில் சென்று பேசிவருகிறார்.. ராகுலுடன் பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளி்ப்படுத்தினர்.. தொண்டர்கள் வழங்கிய இளநீரை நடைபயணத்தின்போது வாங்கி பருகினார். 3வது நாளான இன்றும், தேசியக்கொடியையும், காங்கிரஸ் கொடிகளையும் தொண்டர்கள் ஏந்திய வண்ணம் ராகுலுடன் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

 தரமான சம்பவம்

தரமான சம்பவம்

ராகுலின் நடைபயணத்தை பாஜக விமர்சித்து வருகிறது.. இந்த நடைபயணம் ராகுல் உடல் நலனுக்கு வேண்டுமானால் நல்லதாக இருக்கலாம். ஒரு போதும் நாட்டு நலனுக்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ நல்லதாக இருக்காது என்று கருத்து சொல்லி வருகிறார்கள்.. ஆனால், எதிர்க்கட்சிகளோ, ராகுலின் இந்த நடைபயணம்தான், 2024 தேர்தலுக்கான தரமான சம்பவமாக இருக்க போகிறது.. மிக சரியான அரசியலை ராகுல் தற்போது தேர்ந்தெடுத்துள்ளதாக கருத்து கூறி வருகிறார்கள்.

யாத்ரா

யாத்ரா

இந்திய வரலாற்றை பொறுத்தவரை, பெரும் தலைவர்களுக்கு பெரிதும் கைகொடுத்து உதவியுள்ளது இதுபோன்ற யாத்திரைகள்.. மக்களுடன் நேரடியாக நெருங்கி சந்திப்பதால் இதன்மூலம் கிடைக்கக்கூடிய தாக்கங்கள் அதிகம்.. அந்தவகையில், ராகுலுக்கு இந்த யாத்திரை கைகொடுக்கும் என்கிறார்கள்.. விரைவில் எம்பி தேர்தல் வர உள்ள நிலையில், காங்கிரஸ் பக்கம் கவனத்தை ஈர்க்க இத்தகைய பெரிய அளவிலான நடைபயணங்கள் முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது..

விவாதம்

விவாதம்

ராகுல்காந்தியின் இந்த நடைபயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைய இன்னொரு காரணம், அது தமிழகத்தில் இருந்து துவக்கப்படுவதுதான்.. மக்கள் மீது இந்த நடைபயணங்கள் தாக்கம் ஏற்படுத்துகிறதோ, இல்லையோ எல்லோரும் இதுகுறித்து பேசுவதும், விவாதிப்பதும்கூட காங்கிரஸ் தரப்புக்கு வலு சேர்க்கும் என்கிறார்கள்.. பாஜக இப்போதே இந்த யாத்திரையை கிண்டலடித்தாலும், விலைவாசி உயர்வு போன்ற முக்கியமான பிரச்னைகளை எழுப்ப இந்த யாத்திரைதான் உதவிகரமாக இருக்கப்போகிறது என்பதையும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+