''உனக்கு எவ்வளவு கொழுப்பு''.. அமைச்சர் மனோ தங்கராஜை ஒருமையில் சாடிய சீமான்!
கன்னியாகுமரி: அமைச்சர் மனோ தங்கராஜை மிக கடுமையான முறையில் ஒருமையில் சாடிய நாம் தமிழர் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான், எவ்வளவு நாளுக்கு ஆடுவீங்க என தாம் பார்க்கிறேன் என பேசியிருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை நாம் தமிழர் கட்சியின் ஆதிக்கம் சற்று ஓங்கியிருக்கக் கூடிய பகுதியாகும். நாம் தமிழர் கட்சிக்கு குமரி மாவட்டம் முழுவதும் கிளை வாரியாக நிர்வாகிகள் உள்ளதால் ஓட்டு வங்கிக்கும் குறைவில்லை. இந்தச் சூழலில் திமுக நிர்வாகியை கண்டித்து நாகர்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சீமான், அமைச்சர் மனோ தங்கராஜை ''பால் வியாபாரி'' என்றும், ''உனக்கு என்ன கொழுப்பு'' இருக்கும் எனவும் சாடினார்.

அமைச்சர் மனோ தங்கராஜ் தனது மகனுக்கு எம்.எல்.ஏ. சீட் வாங்கிவிடலாம் என துடித்துக் கொண்டிருக்கிறார் என்றும் அவரை பற்றிய எல்லா விவரமும் தனக்குத் தெரியும் எனவும் பேசிய சீமான், ஒரு கட்டத்தில் ஒருமையில் அட்டாக் செய்தார். ''நாகர்கோவிலை கெடுக்க வேறு யாரும் தேவையில்லைங்க, இந்த மனோ தங்கராஜூன்னு ஒரு பய போதும். நீயும் வாழ்நாள் முழுவதும் அமைச்சராகவே இருந்திடலாம்னு நினைக்கிற, உன் மகனுக்கு எம்.எல்.ஏ. சீட் வாங்கத் துடிக்கிற, நான் விட்ருவேன்னு மட்டும் நினைக்காதே. நில்லு பார்க்கலாம். ஆடு, இன்னும் எவ்வளவு நாளுக்கு ஆடுவீங்கன்னு பார்க்கிறேன்'' என மிக கடுமையான முறையில் ஒருமையில் சாடினார் சீமான்.
அதேபோல் பால் வியாபாரம் செய்தால் மட்டும் போதுமா, மாடுகள் எங்கே என வினவிய சீமான், மனோ தங்கராஜை பார்த்தால் மாடு எங்கே எனக் கேளுங்க என்றும் கூறினார். சீமானை பொறுத்தவரை கடந்த சில மாதங்களாகவே ஒருமையில் பேசுவதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜை இந்தளவுக்கு பேசிவிட்டார். இதற்கு பதிலடியாக சீமான் மீது வழக்குப் பதிய அமைச்சர் தரப்பு முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications