கன்னியாகுமரியில் பெண்களிடம் ஆடைகளை தொட்டு.. அரசு போக்குவரத்து கழக ஊழியர் செய்த அசிங்கம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பிளாட்பார்மில தூங்கி கொண்டிருந்த பெண்களிடம் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் ஒருவர் ஆடைகளை தொட்டு அத்துமீறியது போன்ற சிசிடிவி வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
பெண்களிடம் சிலர் "சைகோ" மனநிலையுடன் அத்துமீறுவதும், பாலியல் ரீதியாக அச்சுறுத்துவதும், துன்புறுத்துவதும் என்று பலர் சுற்றுகிறார்கள். ரயில் நிலையங்களில் தூங்கும் பெண்கள், பேருந்து நிலையத்தில் தூங்கும் பெண்கள், பிளாட்மார்மில் தூங்கும் பெண்கள் சிலர் பாலியல் ரீதியாக சீண்டலுக்கு உள்ளாக்கப்படுவது நடக்கிறது.

அதேபோல் மனநலம் பாதித்த பெண்கள், குழந்தைகள், மூதாட்டிகள் போன்றவர்களை அவர்களின் அண்டை வீட்டார், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள், உறவினர்கள், நெருங்கிய உறவுகளே பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபடுகிறார்கள். சிலர் சைகோ மன நிலையில் கேவலமாக நடந்து கொள்வதும் நடக்கிறது. உள்பாவாடையை திருடுவது, உள்ளாடைகளை திருடுவது என சில சைகோக்கள் செயல்களை செய்திருக்கிறார்கள். அதற்காக கைதுகளும் நடந்துள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பிளாட்பார்மில தூங்கி கொண்டிருந்த பெண்களிடம் அரசு ஊழியர் ஒருவர் பாலியல் ரீதியாக அத்துமீறியது போன்ற சிசிடிவி வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. குளச்சல் பேருநது நிலைய பிளாட்பார்மில் தூங்கி கொண்டிருந்த பெண்களிடம் அத்துமீறி உள்ளாராம் ஒரு அரசு ஊழியர்.
பெண்களின் ஆடைகளை களைந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு ஊழியர் குறித்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடந்தது. அவர் அரசு போக்குவத்துக் கழக ஊழியர் என்று கூறப்படுகிறது. அவரது விவரங்கள் வெளியாகவில்லை.. அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் அரசு போக்குவரத்து கழக ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications