தினமும் பாலியல் தொல்லை.. 3 மாசமா சம்பளம் தரல.. விஷம் அருந்தி தீக்குளிக்க முயன்ற துப்புரவு பெண்!

துப்புரவு பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்ததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தினமும் பாலியல் தொல்லை! விஷம் அருந்தி தீக்குளிக்க முயன்ற துப்புரவு பெண்!-வீடியோ

    கன்னியாகுமாரி: பாலியல் தொல்லை ஒரு பக்கம்.. 3 மாசமாக சம்பளம் தராதது மறுபக்கம்.. என சேர்ந்து மன உளைச்சலுக்கு உண்டான துப்புரவு பணியாளர் ராஜம் தீக்குளிக்க முயன்ற சம்பவம் மார்த்தாண்டம் பகுதியையே அதிர வைத்துவிட்டது.

    கன்னியாகுமாரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே களியக்காவிளை பேரூராட்சியில் தினக்கூலி ஒப்பந்த அடிப்படையில் 13 பேர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்கள் பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையங்கள் காய்கறி சந்தைகள் மற்றும் 15 வார்டுகளில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வாழ்ந்து வருகின்றனர்.

    25 ரூபாய்

    25 ரூபாய்

    இதில் மீனச்சல் பகுதியைச் சேர்ந்தவர்தான் ராஜம். வயசு 44 ஆகிறது. கடந்த 7 வருஷங்களாக களியக்காவிளை பேரூராட்சியில் தினக்கூலி ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகிறார். களியக்காவிளை பஸ் ஸ்டேண்ட்டில் உள்ள கழிப்பறையின் ஒப்பந்ததாரர்கள் சந்திரன், ராமதாஸ் ஆகியோர். இவர்கள் கழிப்பறைகளை சுத்தப்படுத்த ராஜத்திடம்தான் சொல்வார்கள். இதற்கு 25 ரூபாய் சம்பளம்.

    தொந்தரவு

    தொந்தரவு

    ஆனால் இவர்கள் ராஜத்துக்கு மட்டும் 3 மாதமாக சம்பளமே தரவில்லை என்று சொல்லப்படுகிறது. எப்போது கேட்டாலும் அலைக்கழிக்கப்படுவதுடன், அவருக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது. கழிப்பறை ஒப்பந்ததாரர்கள் அடிக்கடி தன்னை பாலியல் தொந்தரவு கொடுப்பதைப் பற்றி பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார்கள்.

    தற்கொலை முயற்சி

    தற்கொலை முயற்சி

    3 மாசமாக சம்பளம் தராத காரணத்தால் வறுமையில் வாடினார் ராஜம். பாலியல் தொந்தரவுகள் காரணத்தாலும், வறுமையாலும், புகார் தந்தும் நடவடிக்கை எடுக்காததாலும், மன உளைச்சலில் இன்று காலை பேரூராட்சி அலுவலகம் முன்பு வந்து விஷம் அருந்தி சாக போவதாக கூறி உள்ளார். பேரூராட்சிக்கு சொந்தமான லாரியின் அடியில் படுத்து ஒரு பாட்டிலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை செய்வதாகவும் சக ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.

    கண்ணீர்

    கண்ணீர்

    இதையடுத்து பதறிபோன ஊழியர்கள் களியக்காவிளை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த ராஜத்திடம் மண்ணெண்ணெய் பாட்டிலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராஜம் நடந்த விஷயங்களை அழுதவாறே கூறி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    விசாரணை

    விசாரணை

    இதையடுத்து, ராஜம் விஷம் சாப்பிட்டு இருக்கிறாரா என்பதை அறிய போலீஸ் வாகனத்தில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது களியக்காவிளை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+