இந்து கடவுள்கள் மீது அவதூறு... மதமாற்ற புகாரில் சிக்கிய தையல் ஆசிரியை சஸ்பெண்ட் - அதிரடி உத்தரவு

மதமாற்றம் புகாரில் சிக்கிய கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: மாணவிகளை மதமாற்றம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் சிக்கிய கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி தையல் ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மாணவி காவல்துறையிடம் புகார் கூறும் வீடியோ வெளியானதால் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டதையடுத்து ஆசிரியை மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    கன்னியாகுமரியில் மாணவிகளிடம் மதமாற்ற சர்ச்சை - தையல் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு

    கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை பகுதியில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி
    இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்

    இந்த பள்ளியில் தையல் கலை ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியை தையல் வகுப்புக்கு வரும் இந்து மத மாணவிகளிடம் இந்து மத கடவுள்களை அவதூறாக பேசுவதோடு கிறிஸ்தவ மத பிரார்த்தனைகளை சொல்லி பிரார்த்தனை செய்ய வற்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில் நேற்றும் தையல் வகுப்பிற்கு சென்ற மாணவிகளிடம் இதே நடவடிக்கையில் அந்த ஆசிரியை ஈடுபட்டதாக தெரிகிறது.

     மாணவிகள் புகார்

    மாணவிகள் புகார்

    இதனையடுத்து மாணவிகள் உடனடியாக தங்கள் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர்
    இதனையடுத்து பெற்றோர்கள் இரணியல் போலீசாருக்கு தகவலளித்து அவர்களுடன் பள்ளிக்கு சென்று தலைமையாசிரியரிடம் புகார் அளித்தனர். காவல்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    காவல்துறையினர் விசாரணை

    காவல்துறையினர் விசாரணை

    மாணவிகள் ஆசிரியையின் நடவடிக்கை குறித்த குற்றச்சாட்டை அடுக்கினர். இந்த நிலையில் தலைமை ஆசிரியர் முன் போலீசார் மாணவி ஒருவரிடம் விசாரணை நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. மதமாற்ற சர்ச்சை வீடியோ சம்பந்தமாக தையல் ஆசிரியை இடம் விசாரணை நடத்தி அவர் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

    ஆசிரியை மீது நடவடிக்கை

    ஆசிரியை மீது நடவடிக்கை

    இதற்காக மாவட்ட கல்வி அலுவலர் எம்பெருமாள் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. துறைவாரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு ஆசிரியை மதமாற்ற சர்ச்சையில் சிக்கி உள்ள சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆசிரியை சஸ்பெண்ட்

    ஆசிரியை சஸ்பெண்ட்

    இந்த நிலையில் ஆசிரியை மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தையல் ஆசிரியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மாவட்ட கல்வி அலுவலர் எம்பெருமாள் உத்தரவிட்டுள்ளார். தையல் ஆசிரியை பியட்றிஸ் தங்கத்தை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+