TVK SETBACK: தவெகவுக்கு ஏமாற்றம் தந்த கன்னியாகுமரி.. ஒரு தொகுதியிலும் லீடிங் இல்லை
கன்னியாகுமரி: கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 109 தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ளது. ஆனால், கன்னியாகுமரியில் உள்ள 6 தொகுதிகளில் கூட தவெக வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 85.10% வாக்குகள் பதிவான நிலையில் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவியது. எக்ஸிட் போல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக அமைந்திருந்தாலும், காலை முதலே தவெக கணிசமான தொகுதிகளில் முன்னிலை பெற்று வந்தது.

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் தவெக வரலாற்றை மாற்றியமைத்துள்ளது. திமுக, அதிமுகவின் கோட்டை என்ற பகுதிகள் எல்லாவற்றையும் தவெக தட்டி தூக்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 109 இடங்களில் விஜயின் தவெக முன்னிலையில் உள்ளது. ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட தவெக லீடிங்கில் இல்லாதது அக்கட்சிக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல தொகுதிகளில் தவெக எதிர்பார்த்த அளவிற்கு முன்னிலை பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தர், திமுக வேட்பாளரை விட 3,894 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இங்கு தவெக மூன்றாவது இடத்தில் தள்ளப்பட்டுள்ளது.
நாகர்கோவில் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆஸ்டின் 7,570 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், தவெக இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோல், குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 2,435 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். இங்கும் தவெக இரண்டாம் இடத்தில் உள்ளது. விளவன்கோடு தொகுதியில் காங்கிரஸ் 20,762 வாக்குகள் முன்னிலையில் இருக்கும் நிலையில், பத்மநாபபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்லசாமி 15,569 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.
இந்த இரண்டு தொகுதிகளிலும் தவெக இரண்டாம் இடத்தில் உள்ளது. கிள்ளியூர் தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் குமார் 3,285 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். இங்கும் தவெக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மொத்தத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான தொகுதிகளில் தவெக முன்னிலை பெற முடியாமல், இரண்டாம் அல்லது மூன்றாம் இடங்களில் மட்டுமே நிலைத்து இருப்பது கவனிக்கத்தக்கதாகும்.
-
நீ என்ன திமுக ஆளா? மரியாதை இல்லாமல் பேசிய அமைச்சர்கள்.. சட்டசபை செயலர் சீனிவாசன் ராஜினாமா பின்னணி?! -
காலம் எவ்ளோ வேகமாக சுத்துது! அன்று கடம்பூர் ராஜூவுக்காக விஜய் காத்திருந்தார்! இன்று அப்படியே உல்டா! -
குதிரை பேரமல்ல! யானை பேரம்! தவெகவில் அதிமுகவினர் இணைவதற்கு இபிஎஸ்தான் காரணம்! ஆதவ் அட்டாக் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு! -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
அதிமுகவில் பட்ட கஷ்டம்! தவெகவில் மரியாதை கொடுத்தால் போதும்! பதவிலாம் வேண்டாம்! உடுமலை ராதாகிருஷ்ணன் -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி!












Click it and Unblock the Notifications