அதென்ன வாயில் வெள்ளையா.. ஓடும் பஸ்ஸில்.. ஹாயாக ஜன்னலோரம் சாய்ந்து.. சார் பண்ற வேலையை பார்த்தீங்களா
ம் பஸ்ஸில் சிகரெட் பிடித்து கொண்டே டிக்கெட் தந்துள்ளார் ஒரு கண்டக்டர்
கன்னியாகுமரி: குமரியில் அரசு பஸ்ஸி நடந்த சம்பவம் ஒன்று, இணையத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.. இதற்கு ஏராளமான இணையவாசிகள் திரண்டு வந்து கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.
நாளுக்கு நாள் அரசு பஸ் கண்டக்டர்கள், டிரைவர்களின் பாதுகாப்புகள் அதிகமாகிவிட்டது.. பஸ் படிக்கட்டிலேயே தொங்கி கொண்டு போகும் மாணவர்களால், ஏராளமான இன்னல்களுக்கு ஆளாவது இந்த அரசு கண்டக்டர்களும், டிரைவர்களும்தான்.
சில நாட்களுக்கு முன்புகூட, ஸ்ரீபெரும்புதுாரில் பஸ் டிரைவர், கண்டக்டர் மீது அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. அதேபோல, சில அரசு பஸ் கண்டக்டர், டிரைவர்களின் அட்டகாசமும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.

கண்டக்டர்கள்
அதிலும் 2 மாதத்துக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம், பொதுமக்களிடையே கொதிப்பை ஏற்படுத்திவிட்டது.. திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன.. குறிப்பாக கீழப்பழுவூர், சாத்தமங்கலம், வெற்றியூர், கள்ளூர், முடிகொண்டான் திருமானூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவிகள் தஞ்சையில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

பஸ் + பாஸ்
இவர்கள் தினமும் அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் அரசு பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர்.. இந்த மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் தரப்பட்டுள்ளது. ஆனால், இவர்கள் பஸ் பாஸில் பயணம் செய்வதால், கண்டக்டர் எல்லைமீறி ஆபாசமாகவே மாணவிகளை பேசிவிட்டார்... "ஏன் இப்படி முன்னாடியே பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துடறீங்க.. அடுத்த பஸ்சில் வாங்க.. ஓசியில் பஸ்ஸில் வரக்கூடாது.. காசு கொடுத்து வர்றவங்க மட்டும்தான் சீட்டில் உட்கார வேண்டும், பஸ் பாஸ் வைத்து இருக்கும் ஸ்கூல் பிள்ளைகள் நின்று கொண்டு வரவேண்டும்' என்று கண்டக்டர் திட்டி தீர்த்துவிட்டார்.. இதை சில மாணவிகள் தட்டிக்கேட்கவும், அவர்களை ஆபாசமாகவும் திட்டினார்..

சிகரெட்
இதுபோல ஒருசில கண்டக்டர்கள் சர்ச்சைகளில் சிக்கி கொண்டு, மேலதிகாரிகளின் வசவுகளுக்கு ஆளாவதும் உண்டு.. இப்போது ஒரு வீடியோ வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. கன்னியாகுமரி மாவட்டம் பனச்சமூடு பகுதியில் இருந்து மார்த்தாண்டம் பகுதிக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.. பஸ்ஸில் எத்தனை பேர் பயணிக்கிறார்கள் என்று தெரியவில்லை.. ஆனால், கண்டக்டர் ஒரு சீட்டில் உட்கார்ந்துள்ளார்.. கையில் உள்ள பையை, பக்கத்தில் வைத்துவிட்டு, சிகரெட்டை 2 கைகளாலும் மாறி மாறி புகைக்கிறார்.. பிறகு, விசில் எடுத்து ஊதுகிறார்.. பிறகு பயணிகளுக்கு தருவதற்காக பைக்குள் கையை விட்டு, டிக்கெட்களை வெளியே எடுக்கிறார்.

டிக்கெட்
இதையெல்லாம் அதே ஓடும் பஸ்ஸில், கண்டக்டர் சிகரெட் பிடிப்பதை பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ கடந்த 30 ம் தேதி வெளியாகி உள்ளதாக தெரிகிறது.. அத்துடன் உயர் அதிகாரிகளின் பார்வைக்கும் சென்றுள்ளது.. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கண்டக்டரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இவர் பெயர், ஊர் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.. வீடியோ வெளியாகி உள்ள நிலையில், சஸ்பெண்ட் செய்யப்படுவாரா? என்று இணையவாசிகள் கேட்டு வருகிறார்கள்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications