கன்னியாகுமரி ரயில்வே ஸ்டேஷனில் குழந்தையை தொட்ட நபர்.. 3 மணி நேரத்தில் நாகர்கோவில் போலீஸ் செம சூப்பர்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பலூன் வியாபாரிக்கு நடந்த சம்பவம்தான் நேற்று முதல் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. நாகர்கோவிலில் 3 வயது பெண் குழந்தை கடத்தல் சம்பவம் பெற்றோர்களை மட்டுமல்ல, அந்த பகுதி மக்களையே அதிர்ச்சியில் உறைய வைத்த நிலையில், மிகப்பெரிய திருப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது?
மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் ரஞ்சன்.. இவருக்கு 22 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் முஸ்கான்.. 19 வயதாகிறது..

இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இடம் மாறி, பலூன் வியாபாரம் செய்து வருகிறார்கள்..
கன்னியாகுமரி பலூன் வியாபாரி
அந்தவகையில், சமீபத்தில் நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு சவேரியார் தேவாலய திருவிழாவுக்கு வந்திருந்தனர். திருவிழா முடிந்ததும், சொந்த ஊருக்கு திரும்புவதற்காக குடும்பத்துடன் நேற்று முன்தினம் மாலை நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் காத்திருந்தனர்.
அப்போது, அங்கு வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், ரஞ்சனுடன் பேசி கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இவர்களது 3 வயது குழந்தை சாரா திடீரென அழுதிருக்கிறாள்.. உடனே அந்த ஆட்டோ டிரைவர், "நான் சாப்பிட ஏதாவது வாங்கி தருகிறேன்" என்று சொல்லி, குழந்தையை தூக்கிக் கொண்டு போனார்.. ஆனால், அதற்கு பிறகு அந்த டிரைவர் வரவேயில்லை..
சாப்பாடு வாங்கித் தரேன்
குழந்தையுடன் போனவரை வரவில்லையே என்று பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.. ஆனால் 1 மணி நேரமாகியும் குழந்தை திரும்பாததால் பதறிப்போன ரஞ்சன் உடனே கோட்டாறு போலீசுக்கு ஓடிச்சென்று புகார் கொடுத்தார்.. பிறகு ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், உடனடியாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்... ரயில்வே ஸ்டேஷனில் உள்ள சிசிடிவி கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டன..

மாயமான ஆட்டோ டிரைவர்
அப்போதுதான், குழந்தையை தூக்கிக் கொண்டு ஒரு ஆட்டோவில், அந்த நபர் செல்வது கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது. அந்த ஆட்டோவின் நம்பரை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. அதில், அந்த ஆட்டோ டிரைவர் பெயர் யோகேஷ் குமார், 32 வயதான இவர் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், இவர்தான் குழந்தையை கடத்தினார் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
பிறகு, சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன், யோகேஷ் குமாரின் செல்போன் சிக்னல் கண்காணிக்கப்பட்டது... பார்வதிபுரம் அருகே உள்ள ஆலம்பாறை காட்டுப்பகுதியில் யோகேஷ் குமார் பதுங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.. உடனே சுமார் 50 போலீசார் அந்த காட்டுக்குள் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
புதரில் ஆட்டோ டிரைவர்
அப்போது புதர்களுக்குள் குழந்தையுடன் மறைந்திருந்த யோகேஷ் குமாரை சுற்றிவளைத்து போலீசார் பிடித்தனர்.. இதை யோகேஷ் குமார் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.. பிறகு அவரிடமிருந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
மீட்கப்பட்ட 3 வயது குழந்தை உடனே ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில், குழந்தைக்கு எந்தவித பாலியல் துன்புறுத்தலும் இல்லை என்பது உறுதியானது.. குழந்தையின் உடல்நலம் சீராக இருப்பதாக டாக்டர்களும் கூறியதையடுத்து, மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் நேரடியாக குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

3 மணி நேரத்தில் சபாஷ்
பிறகு, குழந்தையை கடத்திய யோகேஷ் குமாரை கோட்டாறு போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். ஆனால், குழந்தையை விற்பதற்காகத்தான் யோகேஷ் குமார் கடத்தினாரா? குழந்தை கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? இதற்கு முன்பு இப்படி ஏதாவது குழந்தைகளை கடத்தி உள்ளாரா? என்றெல்லாம் பல கோணங்களில் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் கடத்தப்பட்டு வெறும் 3 மணி நேரத்தில் அந்த குழந்தையை பத்திரமாக மீட்ட கன்னியாகுமரி போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications