கன்னியாகுமரியில் கொடூர கொலை... தம்பதியர் பலி... மகள் படுகாயம்
கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி அருகே வீட்டிற்குள் புகுந்து மர்மகும்பல் சரமாரியாக வெட்டியதில் கணவன், மனைவி சம்பவ இடத்திலே துடி, துடித்து உயிரிழந்தனர். மகள் படுகாயமடைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்து என்ற மணிகண்டன் (50).
இவர் தோவாளை மலர் சந்தையில் மொத்த பூ வியாபாரம் செய்து வந்தார்.

மர்மகும்பல் வெறியாட்டம்
இவருக்கு கல்யாணி (35) என்ற மனைவியும் 10 ம் வகுப்பு படிக்கும் ராமலட்சுமி(15) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பூ வியாபாரி வீட்டிற்க்குள் புகுந்தது மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல்.

சரமாரியாக வெட்டு
திடீரென அந்த கும்பல் பூ வியாபாரி முத்து மற்றும் அவரது மனைவி மற்றும் மகளை கண்மூடிதனமாக வெட்டினார்கள். இதில் தலை, கை வயிறு உட்பட பல இடங்களில் வெட்டுபட்ட முத்துவின் மனைவி வீட்டிலேயே பரிதாபமாக பலியானார்.

மகள் படுகாயம்
மேலும் பூ வியாபாரி முத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மகள் ராமலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போலீஸ் விசாரணை
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குபதிவு செய்து, கொலை குறித்து விசாரனை நடத்தி வருகிறார்கள். பரப்பரப்பான தோவாளை மலர் சந்தை அருகிலேயே அமைந்துள்ள தெருவில் மர்ம கும்பலால் ஒரு குடும்பமே வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications