கன்னியாகுமரியில் காதலியுடன் வீடியோ காலில் பேசிய காதலன்.. வினையான விளையாட்டு.. கனவிலும் நினைக்காதது
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். தூத்தூர் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் ஜெய்சக்ஙரன் பட்டதாரி ஆவார். இவர் ஒரு இளம் பெண்ணை காதலித்துள்ளார். காதலியுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். அப்படித்தான் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது காதலியை மிரட்டுவதற்காக விளையாட்டாக ஒன்று செய்தார்.ஆனால்அது வினையாக மாறிவிட்டது.
இன்றைக்கு இளைஞர்கள் காதலிப்பது அதிகரித்துள்ளது. காதலிப்பது என்று சொல்வதைவிட இனக்கவர்ச்சியை காதல் என்று புரிந்து கொண்டு 16 வயதிலேயேகாதலில் விழுந்து வாழ்க்கையை தொலைக்கிறார்கள். எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டிய வயதில், காதலில் விழுந்துவிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் காதலி அல்லது காதலன் தான் உலகம் என்று எதிர்காலத்தை கோட்டைவிடுகிறார்கள்.

கருத்து வேறுபாடுகள்
இன்னொரு பக்கம் காதலிக்கும் போது ஏற்படும் கருத்து வேறுபாடுகளை கையாளத்தெரியாமல் தவறான முடிவெடுப்பதும் நடக்கிறது. கடந்த சில வருடங்களாகவே காதலி அல்லது காதலன், வாழ்க்கை குறித்து புரிந்து கொள்ளாமல் தவறான முடிவெடுக்கிறார்கள். சில நேரங்களில் விளையாட்டிற்கு செய்வதும் வினையாகிவிடுகிறது. அப்படித்தான் கன்னியாகுமரியில் நடந்துள்ளது.
கன்னியாகுமரி இளைஞர்
கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுத்தன்துறை பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் தூத்தூர் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவியும், ஜெய்சங்கரன்(வயது 23) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் ஜெய்சங்கரன் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். மேல்படிப்பு படிக்க காத்திருந்தார்.
காதலித்த ஜோடி
இளைஞர் ஜெய்சங்கரனும், கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ஒரு இனம்பெண்ணும் காதலித்து வந்துள்ளார்கள். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். இதையடுத்து ஜெய்சங்கரன் காதலியுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். அப்போது இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
வீடியோ கால்
இந்த நிலையில் நேற்று மதியம் ஜெய்சங்கரன் தனது காதலியிடம் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் காதலியை மிரட்டுவதற்காக விளையாட்டாக தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் போர்வையால் தூக்குப்போட்டு தொங்கியபடி விளையாடியுள்ளார்.
வினையான விளையாட்டு
அப்போது திடீரென போர்வை கழுத்தில் இறுக்கியதால் உயிருக்கு போராடியிருக்கிறார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஜெய்சங்கரனின் தாயார் ஓடி வந்து அறையின் கதவை திறக்க முயன்றார். ஆனால் முடியாததால் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்கள். அதற்குள் ஜெய்சங்கரன் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதார்கள்.
முட்டாள் தனம்
காதலியை மிரட்டுவதற்காக விளையாட்டாக தூக்கில் தொங்துவது போல் நடித்த பட்டதாரி வாலிபர் இன்று உயிருடன் இல்லை.. இதுபோன்ற முட்டாள் தனத்தை யாருமே செய்யக்கூடாது. ஏனெனில் விளையாட்டு வினையாகிவிடும். எந்த பிரச்சனை என்றாலும் பேசி தீர்க்க வேண்டும். உங்களுக்கு தவறான எண்ணங்கள் வந்தால்,அதற்கு உரிய தீர்வுகள் உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications