கன்னியாகுமரியில் டீ குடிக்க போன இளைஞர்கள்.. குறுக்கே நின்ற பால் வண்டி.. எதிரில் வந்த எமன்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அருகே உள்ள இறச்சகுளம் பகுதியை சேர்ந்த வங்கி ஊழியர் சதீஷ் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான சங்கர் என்பவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் நாகர்கோவில் நோக்கி சென்றனர். ஒழுகினசேரியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்து விட்டு அதிகாலை 2 மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஆவின் பாலகம் முன்பு பால் வண்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் இருவருக்கும் எமனாக கார் ஒன்று வந்தது.

முடிந்தால் அதிகாலை நேரத்தில் இருசக்கர வாகனங்களில் நெடுஞ்சாலைகளில் பயணிக்க வேண்டும்.. இல்லை என்றால், அதிகாலை நேரங்களில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது மிகவும் கவனமாக பயணிக்க வேண்டும்.. அதிகாலையில் டீ குடிக்க சென்ற நண்பர்கள், பால் வண்டி குறுக்கே வந்தது.. அப்போது திடீரென வந்த காரால் அவர்களது வாழ்க்கையே முடிந்துவிட்டது.

What happened to the youths who went to drink tea at Nagercoil in Kanyakumari district

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் பகுதியை சேர்ந்த 23 வயதாகும் சதீஷ் வங்கி ஊழியராக பணியாற்றி வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான 20 வயதாகும் சங்கர் என்பவரும் நண்பர்கள் ஆவர். சனிக்கிழமை நள்ளிரவு வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் நாகர்கோவில் நோக்கி சென்றனர். அங்கு ஒழுகினசேரியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்து விட்டு அதிகாலை 2 மணிக்கு மீண்டும் வீடு நோக்கி புறப்பட்டு சென்றார்கள். அந்த பைக்கை வங்கி ஊழியர் சதீஷ் ஓட்டினார். கல்லூரி மாணவர் சங்கர் பின்னால் அமர்ந்திருந்தார்.

புத்தேரி மேம்பாலத்தை தாண்டி பைக் சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரம் உள்ள ஆவின் பாலகம் முன்பு பால் வண்டி ஒன்று திடீரென வந்து நின்று கொண்டிருந்தது. இதனால் சதீஷ் மோட்டார் சைக்கிளை லேசாக திருப்பி செல்ல முயன்றிருக்கிறார். அப்போது நாகர்கோவில் நோக்கி கார் ஒன்று வேகமாக எமனாக வந்தது. அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக பைக் மீது கார் மோதியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் சதீஷ் மற்றும் சங்கர் ஆகிய இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு இறந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ரோந்து பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிறகு 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த வங்கி ஊழியர் சதீசுக்கு பெற்றோர் கிடையாது என்பதும் சதீஷ் சிறுவயதில் இருந்த போதே இருவரும் இறந்து விட்டார்கள் எனப்தும அவருக்கு ஒரு தங்கை இருக்கிறார் என்பதும், இருவரும் பாட்டி பராமரிப்பில் இருந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.

அதேபோல் உயிரிழந்த சங்கர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். விபத்தில் ஒரே பகுதியை சேர்ந்த 2 பேர் பலியான சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+