"மாட்டிக்கிருச்சே".. பஸ் ஸ்டாண்டு பாத்ரூமில் நுழைந்த பெண்.. அட கன்றாவியே.. முளைச்சு மூணு இலைகூட விடல
கன்னியாகுமரி: நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்டில் நடந்த சம்பவத்தை கேட்டு, அந்தபகுதியே அதிர்ந்து போய் கிடக்கிறது.. வடசேரி பஸ் ஸ்டாண்டில் நடந்ததை கேள்விப்பட்டு, கன்னியாகுமரியே கதிகலங்கி கிடக்கிறது.
சமீபத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.. அப்போது கன்னியாகுமரியில் சில மாணவிகள், திடீரென வீட்டை விட்டு போய்விட்டார்கள்.. சிலர் தங்களது காதலுடனுன் ஓட்டம் பிடித்துவிட்டார்கள்..

இதனால், போலீசுக்கு புகார்கள் குவிந்ததையடுத்து, கன்னியாகுமரி பள்ளிகள் மற்றும் பஸ் ஸ்டாண்டுகளில் பாதுகாப்பை பலப்படுத்த எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டிருக்கிறார்.. அதன்படி, வடசேரி மற்றும் அண்ணா பஸ் ஸ்டாண்டுகளில், நாள் முழுவதும் பெண் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.. அப்படித்தான், நேற்று காலையும் வடசேரி பஸ் ஸ்டாண்டில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
ஸ்கூல் யூனிபார்ம்: அப்போது, ஒரு மாணவி, ஸ்கூல் யூனிபார்முடன், பஸ் ஸ்டாண்டில் இருந்த பாத்ரூமுக்குள் சென்றார்.. சிறிதுநேரம் கழித்து அவர் வெளியே வரும்போது, கலர் டிரஸ்ஸில் வந்தார்.. இதைக்கவனித்த பெண் போலீசார், அந்த மாணவியை கண்காணித்தனர்... கொஞ்ச நேரத்தில் ஒரு இளைஞர் அங்கு வந்தார்.. அவருடன் சேர்ந்து, அந்த மாணவி, கன்னியாகுமரி செல்லும் பஸ்சில் ஏறிக்கொண்டார்.. உடனே பெண் போலீசார் அந்த ஜோடியை மடக்கிப்பிடித்தனர்.. அவர்களிடம் தீவிர விசாரணையையும் துவங்கினர்.
மாணவிக்கு 16 வயதாகிறது.. அருகுவிைளயை சேர்ந்தவர்.. இப்போது 11ம் வகுப்பு படிக்கிறார்.. அந்த இளைஞருக்கு 19 வயதாகிறது.. அதாவது, இப்போதுதான் பிளஸ் 2 முடித்துவிட்டு, காலேஜ் போக போகிறார்.. மாணவர் ஆலயத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் இயக்குநராகவும் இருந்து வருகிறார். இங்கு மாணவி கோச்சிங் செல்லும்போது, அந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது..
கண்டிப்பு: 2 பேருமே ஜோடியாக ஊர் சுற்றி வரவும், மேட்டர் 2 பேரின் குடும்பத்துக்கும் தெரியவந்தது.. இதனால் 2 வீட்டு பெற்றோர்களுமே பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லி உள்ளனர்..
உடனே வீட்டை விட்டு ஓட முடிவெடுத்துவிட்டார்களாம்.. இவ்வளவும் போலீசுக்கு தெரியவந்ததையடுத்து, 2 வீட்டுக்கும் தகவல் தெரிவித்தனர்.. 2 வீட்டு பெற்றோரும் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்தார்கள்.. பிள்ளைகளை பார்த்ததுமே கதறி கதறி அழுதனர்.. இறுதியாக பெற்றோரிடம் அறிவுரைகள் கூறி, போலீசார் அவர்களை ஒப்படைத்தனர்.
யூனிபார்ம்: இதேபோல இன்னொரு சம்பவம்.. இது அண்ணா பஸ் ஸ்டாண்டில் நடந்துள்ளது.. இதுபோலவே, யூனிபார்முடன் மாணவி ஒருவர், அங்கு நின்று கொண்டிருந்த, பஸ்களில் ஒவ்வொன்றாக ஏறி இறங்கி கொண்டிருந்தார்.. அந்த மாணவி பின்னாடியே, சிறுவன் ஒருவனும் சென்றிருக்கிறான்.. இதைப்பார்த்த மகளிர் போலீஸார் அந்த மாணவியிடம் சென்று, எதுக்காக, இத்தனை பஸ்களில் ஏறி இறங்கி கொண்டிருக்கிறாய்? என்று கேட்டார்கள்.
அதற்கு அந்த மாணவி, "இதோ இந்த பையன் என் பின்னாடியே சுற்றி வருகிறான்.. என்னுடைய இன்ஸ்டா அட்ரஸ் வேணுமாம்" என்று சொன்னார்.. உடனே போலீசார் அந்த சிறுவனை பிடித்து விசாரித்தால், அந்த பையன் 8ம் கிளாஸ்தான் படிக்கிறானாம்.. உடனே, சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களையும் பஸ் ஸ்டாண்டுக்கு வரவழைத்து, சிறுவனையும் எச்சரித்து, அட்வைஸ் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
கொடுமை: மாணவ - மாணவிகளை இப்படி கண்காணித்தபோது, ஒரு இளம்ஜோடி சிக்கியது.. ஊரைவிட்டே ஓடிப்போவதற்காக ரெடியாக நின்று கொண்டிருந்தார்கள்.. அந்த பெண்ணுக்கு அப்பா இல்லை, அம்மா மட்டும் இருக்கிறார்.. கஷ்டப்பட்டு பிள்ளையை வளர்த்து வருகிறார்.. அதேபோல, அந்த இளைஞனுக்கு அம்மா இல்லை.. பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார்..
கடைசியில் 2 பேருமே ஊரை விட்டு ஓடுவது தெரிந்ததும், போலீசார் அவர்களுக்கு அறிவுரை சொன்னார்கள்.. பெண்ணை அவரது தாயிடம், இளைஞரை அவரது பாட்டியிடமும் ஒப்படைத்துவிட்டு போனார்கள்... படிக்கிற பிள்ளைகள் இப்படி மனம் தெறிக்கெட்டு ஓடுவது கவலைக்குரியதாக மாறி வருகிறது... இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் நடக்க போகுதோ தெரியவில்லை.. பிள்ளைகளை ஆசிரியர்கள் தவிர, பெற்றோர்களும் கண்காணிக்க வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications