கன்னியாகுமரியில் கல்யாணமாகி 45 நாளில் காயத்ரி இருந்த கோலம்.. பார்த்து கதறி அழுத கணவன்.. சோகம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நடராஜன் என்பவரது மனைவி காயத்ரி கல்யாணமாகி 45 நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தற்கொலைக்கு என்ன காரணம் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் மேலத்தெரு மந்தவிளையை சேர்ந்தவர் 37 வயதாகும் நடராஜன் என்பவர் கன்னியாகுமரி நகரை ஒட்டிய கொட்டாரத்தில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். ஓட்டல் அதிபரான நடராஜனுக்கு அண்மையில் தான் கல்யாணம் நடந்தது.

கோயம்புத்தூர் பீளமேடு பகுதியை சேர்ந்த பாண்டு மகள் காயத்ரி (32) என்பவருடன் நடராஜனுக்கு கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி கன்னியாகுமரி பகுதியில் உள்ள கோவிலில் பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடன் இனிதே திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த ஒன்றரை மாதங்கள் கூட ஆகாத நிலையில் நேற்று முன்தினம் அதாவது கடந்த செவ்வாய்கிழமை இரவு காயத்ரி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஒருஅறைக்குள் சென்றுள்ளார். அங்கு திடீரென மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் வீட்டுக்கு வந்த நடராஜன் தனது மனைவி காயத்ரி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதிருக்கிறார். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர். உடடினயாக அவர்கள் கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயத்ரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணம் ஆன 45 நாளில் காயத்ரி தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது உடனடியாக தெரியவில்லை. பிறகு அவர் தற்கொலை செய்த அறையில் ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளாரா? என போலீசார் வீடு முழுவதும் சோதனை செய்து பார்த்தனர். ஆனால் கடிதம் ஏதும் சிக்கவில்லை.
தற்கொலைக்கு முன்பு காயத்ரி குடும்பத்தில் பிரச்சினை ஏதும் நடந்ததா? இல்லை வேறு ஏதேனும் தற்கொலைக்கு காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் தூக்கில் தொங்கி இருப்பதால்
நாகர்கோவில் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான சில வாரங்களிலேயே புதுப்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications