ஏன் வாய் மூடி அமைதி காக்கிறார் ஸ்டாலின்.. தமிழிசை கேள்வி
சின்மயி விவகாரத்தில் ஸ்டாலின் ஏதும் சொல்லாதது ஏன் என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

கன்னியாகுமரி: சின்ன விஷயத்திற்கெல்லாம் ட்வீட் செய்யும் திமுக தலைவர் ஸ்டாலின், சின்மயி விவகாரத்தில் மட்டும் ஏன் வாய் மூடி இருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
ட்வீட்டரில் மீடூ மூவ்மெண்ட் மூலம் கவிஞர் வைரமுத்து உள்பட பாடகர், இசைக்கலைஞர், இயக்குனர் என பலர் மீது பாலியல் துன்புறுத்தல் குறித்து சின்மயி புகார் தெரிவித்து வருகிறார்.

சின்மயி குற்றச்சாட்டு
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற ஒரு போராட்டத்தில் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழிசையிடம் சின்மயி மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

வாய் மூடி மவுனம் ஏன்?
அப்போது அவர் கூறும்போது, "பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆனால் தமிழகத்தில் சின்ன சின்ன விஷயத்திற்கும் ட்வீட் செய்யும் முக ஸ்டாலின் சின்மயி விவகாரத்தில் வாய் மூடி இருப்பது ஏன்? தங்களுக்கு வேண்டியவர்கள் என்பதால்தானா?

மத உணர்வுகள்
ஆர்.எஸ்.எஸ் என்பது இந்து மத உணர்வுகளை பாதுகாக்கத்தான். ஆனால் இன்றைய காலத்தில் பெண்களே முன் வந்து அந்த உரிமை வேண்டாம் என்று கூறும் போது அதனை ஏற்று கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

வைகோ வாயே திறக்கவில்லை
கடந்த 2 தினங்களுக்கு முன்பு சேலத்தில் இதே கருத்தை வலியுறுத்தி பேசிய தமிழிசை, சின்மயி வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு விசாரிக்கபட வேண்டியது என்றார். மேலும் எஸ்.வி.சேகர் முகநூல் பதிவை கண்டித்த அரசியல் கட்சிகள், வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியதுடன், வைகோ உள்ளிட்டோர் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து வாயே திறப்பதில்லை என்றும் பகிரங்கமாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications