இன்னொரு முறை குடிச்சீங்கன்னா.. செத்து போய்ருவோம்.. எச்சரித்த மினி.. மீறிய கணவர்.. குமரியில் கொடுமை!
குடிப்பழக்கத்தை கைவிடாததால் மனைவி தற்கொலை செய்துகொண்டார்
Recommended Video
கன்னியாகுமரி: "வேணாங்க.. இன்னொரு முறை குடிச்சீங்கன்னா.. நானும், குழந்தைங்களும் செத்துடுவோம்" என்று ஏற்கனவே எச்சரித்தார் மனைவி மினி.. இதையும் மீறி கணவன் தண்ணி அடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால்தான், குழந்தைகளுக்கு விஷத்தை கொடுத்து, தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது!
நாகர்கோவில் பகுதியை சேர்ந்த தம்பதி பிரவின்ராஜ் - மினி. பிரவீன்ராஜ் வாடகை வேன் ஒன்றினை ஓட்டி வந்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும் 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
மினிக்கு 27 வயதாகிறது.. பிரவின்ராஜ் கொஞ்ச காலமாகவே வீட்டு செலவுக்கு பணம் தராமல் இருந்துள்ளார். தினமும் கிடைக்கும் பணத்தை வைத்து தண்ணி அடித்து வந்துள்ளார். இதனால் குடும்பம் நடத்த முடியாமல், குழந்தைகளுக்கு சாப்பாடு போட முடியாமல் மினி தவித்துள்ளார்.

சண்டை
பிரவின்ராஜிடம் இதை பற்றி பலமுறை கேட்டும், காதில் வாங்கி கொள்ளவில்லை என தெரிகிறது. அதனால் தினந்தோறும் இவர்களுக்குள் சண்டை வந்துள்ளது. வாழ்க்கையே வெறுத்து போன நிலையில் தற்கொலை செய்துகொள்ளலாமா என்று மினி பல முறை யோசித்துள்ளார்.

குடிபோதை
இந்நிலையில், கடந்த19-ம் தேதியும் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது.. அப்போது, "இன்னொரு முறை குடிச்சீங்கன்னா.. நானும், குழந்தைங்களும் செத்துடுவோம்" என்று எச்சரித்தும் உள்ளார். ஆனால், அதையும் மீறி அன்று இரவே தண்ணி அடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதை கண்டு அளவுக்கு அதிகமாக நொந்து போனார் மினி.. பிரவீன்ராஜ் வெளியே சென்றுவிடவும், ஏற்கனவே வாங்கி வைத்திருந்த விஷத்தை மினி குழந்தைகளுக்கு தந்து, தானும் குடித்துள்ளார்.

சந்தேகம்
வீட்டில் இருந்து குழந்தைகள் சத்தம் ரொம்ப நேரமாக வராததால், அக்கம் பக்கத்தினர் சந்தேகத்துடன் உள்ளே சென்று பார்த்தனர்.. அப்போதுதான், மினியும், 2 குழந்தைகளும் மயங்கி கீழே விழுந்துகிடப்பதை கண்டு அதிர்ந்து, அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

உயிரிழப்பு
ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையில் இருந்த மினி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். 2 குழந்தைகளும் இப்போதும் தீவிர சிகிச்சையில் உள்ளன.. இதுகுறித்து வடசேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள் என்றாலும், நாகர்கோயில் மக்கள் இன்னும் ஷாக் சம்பவத்தில் இருந்து மீளவில்லை.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications