குமரியில் அதிர்ச்சி! காதல் கணவர், 3 குழந்தைகளை விட்டுவிட்டு 18 லட்சம் பணம், 15 பவுனுடன் பெண் மாயம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ரூ 18 லட்சம் பணம், 15 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு கணவர், குழந்தைகளை விட்டுவிட்டு மாயமான பெண்ணை போலீஸார் தேடி வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மேக்காமண்டபத்தை சேர்ந்தவர் விபின். இவருடைய மனைவி நிஷா. இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் விபின் கடன் சுமையால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கடனை அடைக்க அவர் தனது வீட்டை விற்று ரூ 18 லட்சத்தை வாங்கி, அதை தனது மனைவி நிஷாவிடம் கொடுத்து வைத்திருந்தாராம்.
இதையடுத்து விபின் சென்னைக்கு வழக்கம் போல் பணிக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறிய நிஷா பின்னர் வீடு திரும்பவே இல்லை. இதையடுத்து அவருடைய உறவினர்கள் அவரை தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து விபினுக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர் சொந்த ஊருக்கு வந்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. கடனை அடைப்பதற்காக நிஷாவிடம் கொடுத்து வைத்திருந்த ரூ 18 லட்சம் பணமும் 15 சவரன் தங்க நகைகளையும் நிஷா எடுத்துக் கொண்டு மாயமானது தெரியவந்தது.
இதையடுத்து விபின் போலீஸில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிஷாவை போலீஸார் தேடி வருகிறார்கள். கள்ளக்காதலுக்காக கணவரையும் குழந்தைகளையும் பரிதவிக்க விட்டுவிட்டு நிஷா வேறு யாருடனாவது சென்றுவிட்டாரா, இல்லை, நிஷா இல்லாததை அறிந்து யாரேனும் வீடு புகுந்து பணம், நகைகளை திருடிவிட்டனரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications