புகார் கொடுக்க போன நர்ஸை.. பலவந்தப்படுத்தி.. கர்ப்பமாகி.. அபார்ஷனும் செய்து.. அதிர வைத்த எஸ்ஐ!
எஸ்ஐ ஒருவர் இளம்பெண்ணை கர்ப்பமாக்கி அபார்ஷன் செய்ததாக புகார் எழுந்துள்ளது
கன்னியாகுமரி: புகார் கொடுக்க சென்ற இளம் பெண்ணை பலாத்காரம் செய்து.. அடுத்த சில மாதங்களில் அபார்ஷனும் செய்து விட்டாராம் ஒரு எஸ்.ஐ... இந்த கொடுமை கன்னியாகுமரியில் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் திருமதி ஜோஸ்பின்... இவர் திருவனந்தபுரத்தில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.
இவரை மேக்கோடு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலித்து ஏமாற்றி உள்ளார்.. அத்துடன் பணமோசடியும் செய்திருக்கிறார்.

சுந்தரலிங்கம்
இந்த மோசடி குறித்து புகார் தருவதற்காக பளுகல் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்.. அங்கே சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் இருந்தார். புகாரை பெற்று கொண்டு, ஜோஸ்பின் குறித்த விவரங்கள் கேட்டார்.. இளம்பெண் தனியாக தவிப்பதை அறிந்த சுந்தரலிங்கம் தான் குடியிருக்கும் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு ஏற்பாடு செய்து தந்து குடியமர்த்தினார்.

பலாத்காரம்
பிறகு ஆறுதல் சொல்வது போல அடிக்கடி அந்த வீட்டுக்கு சென்று பெண்ணை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் ஜோஸ்பின் கர்ப்பமாகிவிட்டார்.. இதை சுந்தரலிங்கத்திடம் சொல்லி உள்ளார்.. சுந்தரலிங்கமோ அந்த பெண்ணை அபார்ஷன் செய்துவிடும்படி சொல்லி உள்ளார்.

ஜோஸ்பின்
அதற்கு ஜோஸ்பின் மறுக்கவும், கட்டாயப்படுத்தி குலசேகரம் அருகே தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று அபார்ஷன் செய்ய வைத்துள்ளார். அப்போது ஜோஸ்பின் சத்தம் போடவும், பொதுமக்கள் கூட தொடங்கினர்.. உடனே சுந்தரலிங்கம் தப்பி ஓடிவிட்டாராம்.. பிறகு ஜோஸ்பின் இதை பற்றி பலமுறை போலீசில் புகார் தந்துள்ளார் போலும்.

உள்ளிருப்பு போராட்டம்
ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காததால், கலெக்டர் ஆபீசுக்கு வந்து புகார் தந்ததுடன், உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டார். தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் முறையிட்டார்..இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.. பெண் அளித்த இந்த புகாரின் பேரில் கலெக்டர் உத்தரவிட்டதையடுத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications