கல்யாணமாகி 20 நாளிலேயே.. தாலியை கழற்றி வீசிய மனைவி.. 100 சவரன் நகையுடன் காதலனுடன் எஸ்கேப்!
100 சவரன் நகையுடன் இளம் மனைவி மாயமாகி உள்ளார்
கன்னியாகுமரி: தாலியை கழற்றி ஒரு ஓரமாக வீசிவிட்டு, 100 சவரன் நகையுடன் காதலனை இழுத்து கொண்டு ஓடிவிட்டார் புதுமனைவி!
கன்னியாகுமரி கலெக்டர் ஆபீசில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் வேல்முருகன்.. ஈத்தங்காட்டை சேர்ந்தவர்.. இவருக்கும், ராஜஸ்ரீக்கும் என்பவருக்கும் போன 24ஆம் தேதி கல்யாணம் நடந்தது.
கல்யாணம் ஆகி 20-வது நாள்.. வழக்கம்போல் வேலைக்கு போய்விட்டு, சாயங்காலம் புதுமனைவியை பார்க்க ஆசையாக வந்தார் கணவன்.. ஆனால் ராஜஸ்ரீயை காணோம்.. எங்கெங்கோ தேடினார்.. கிடைக்கவே இல்லை.

ராஜஸ்ரீ
கடைசியில், வீட்டில் ஒரு ரூமின் ஓரத்தில் ராஜஸ்ரீயின் தாலி மட்டுமே இருந்தது.. மொத்தமாக கல்யாணத்துக்கு போட்ட 100 சவரன் நகையுடன் அவர் எஸ்.ஆகி இருந்ததை கண்டு கணவன் வீட்டினர் அதிர்ந்தனர்.. இந்த சமயத்தில், ராஜஸ்ரீயின் பக்கத்து வீட்டுக்காரர் சந்தோஷும் காணாமல் போனதால் சந்தேகம் வலுத்தது.

காதல்
உடனடியாக போலீசில் இரு வீட்டினருமே புகார் தரப்படவும், விசாரணை ஆரம்பமானது. அப்போதுதான் ராஜஸ்ரீயின் காதல் விவகாரம் வெளியே வந்தது.. ஸ்கூல் படிக்கும்போதே, பக்கத்து வீட்டு சந்தோஷ் என்பவருடன் ராஜஸ்ரீக்கு காதல் இருந்துள்ளது.. சந்தோஷ் ஒரு வேலைக்கும் போவது இல்லை.. நண்பர்களுடன் ஊர்சுற்றி வருவது.. கடன் வாங்கி, ஊதாரித்தனமாக செலவு செய்வது என்றுதான் பொழுதை கழித்துள்ளார்.

கண்ணீர்
வேலைக்கு போக சந்தோஷூக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.. பெண் கேட்கும் துணிச்சலும் இல்லை.. அதனால் வருமானமும், பெண்ணும் ஈஸியாக கிடைக்கவே இப்படி ஒரு ஐடியாவை செய்து, பெண்ணை நகையுடன் கடத்திவிட்டதாக ராஜஸ்ரீயின் அப்பா கண்ணீர் வடிக்கிறார்.

விசாரணை
ஆனால் ஆசையாக வளர்த்த ஒரே மகன் இப்படி செய்துவிட்டானே என்ற அதிர்ச்சி கவலையில் சந்தோஷின் அப்பா தற்கொலையே செய்து கொண்டார். ராஜஸ்ரீ - சந்தோஷ் இருவரும் எங்கே என்று காணவில்லை.. வேல்முருகன் நிலைமையோ பரிதாபமாக உள்ளது.. காதலர்கள் பெங்களூரில் இருப்பதாக தகவல் கிடைக்கவும் அங்கேயும் போலீசார் விரைந்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications