ஆசிரியர், மகள் விஷம் குடித்து உயிரிழப்பு.. தீவிர சிகிச்சையில் மனைவி.. கரூர் ஷாக்.. என்ன காரணம்?
கரூர்: குடும்ப பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்ததில், இருவர் உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கரூர் காந்தி கிராமம் கிழக்கு போக்குவரத்து நகரை சேர்ந்த முகமது பரீத் என்பவர், கரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் மனைவி நஸ்ரீன்பானு. இவர்களுக்கு 17 வயதில் மகளும், 9 வயதில் மகனும் உள்ளனர். மகள் தனியார் பள்ளியில் பி ளஸ் 1 படித்து வந்தார்.

இதனிடையே, கரூர் போக்குவரத்து நகரில் முகமதுபரீத், புதிதாக வீடு வாங்கியதில் கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், முகமதுபரீத் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் நேற்று, முகமது பரீத், மந்திரித்த தண்ணீர் எனக்கூறி, மனைவி மற்றும் மகளுக்கு தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு அவரும் அருந்தியுள்ளார். மேலும், இதுகுறித்து அவரது உறவினர் ஒருவருக்கு ஃபோன் செய்து கூறியுள்ளார். இதையடுத்து அங்கு வந்த உறவினர்கள், 3 பேரையும் மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், மகள் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். மற்ற இருவரையும் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியில் முகமது பரீத் உயிரிழந்தார்.
மனைவி நஸ்ரின் பானு தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் உள்ளார். மகனுக்கு விஷம் கொடுக்காததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். மேலும், இந்த சம்பவம் குறித்து தான்தோன்றி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கரூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எந்தப் பிரச்சினைக்கும் தீர்வாகாது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications