கரூர் அரசு ஊழியருக்கு கடைசி நாளில் கண்டம்.. புரோமோசனுடன் கன்னிவாடி போக வேண்டியவர் கம்பி எண்ணுகிறார்
கரூர் : கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பேரூராட்சியில் செயல் அலுவலராக உள்ள ராஜகோபாலுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. அவர் பதவி உயர்வு பெற்று, திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சிக்கு பணி மாறுதலாக செல்ல இருந்தார். கடைசி நாளான நேற்று அலுவலகம் வந்த நிலையில் ராஜகோபால், போகும் போது செய்த சேட்டையால் இப்போது கம்பி எண்ணுகிறார்..
அரசு ஊழியர்கள் சிலர் பட்டா பெயர் மாற்றம் செய்ய, பத்திரம் பதிவு செய்ய, மின் இணைப்பு பெற, குடிநீர் வரி, சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய, விதவையர் தொகை பெற, சொத்து வரி நிர்ணயம் செய்ய என்று பல்வேறு அரசின் சேவைகளை பெற, லஞ்சம் கேட்பதாக புகார்கள் உள்ளது. அப்படி அரசின் சேவைகளை பெற லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை பிடிப்பதற்காகவே லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இருக்கிறது. இது தனித்துறையாகும். 'இது முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் வரும்.

இங்கு லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் குறித்து புகார் அளித்தால், அவர்கள் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை தந்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பார்கள். பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். இப்படியான நடவடிக்கை கடந்த சில மாதங்களில் மட்டும் ஏராளமான அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரூரில் ஒரு அரசு ஊழியர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் லேட்டஸ்டாக சிக்கியுள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் பேரூராட்சி பூவம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் குமரேஷ். இவர் தனக்கு சொந்தமான 3 சென்ட் இடத்திற்கு சொத்து வரி நிர்ணயம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
அவரிடம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜகோபால், அலுவலக உதவியாளர் சிவக்குமார் ஆகியோர் குமரேசை தொடர்பு கொண்டு சொத்து வரி நிர்ணயம் செய்ய வேண்டுமானால் ரூ,17 ஆயிரம் லஞ்சம் கேட்டார்களாம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரேஷ் இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து திருச்சி போலீசார் அறிவுறுத்தலின்பேரில், நேற்று ரசாயன பவுடர் தடவிய ரூ,17 ஆயிரத்தை ராஜகோபாலிடம், குமரேஷ் கொடுத்திருக்கிறார். அப்போது அங்கு மறைந்து இருந்த போலீசார், ராஜகோபால் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அலுவலக உதவியாளர் சிவக்குமார் ஆகியோரை கையும், களவுமாக பிடித்தார்கள். பின்னர் 2 பேரிடமும் அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து ராஜகோபால், சிவக்குமார் ஆகியோரை லஞ்ச ஓழிப்பு போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
லஞ்ச வழக்கில் கைதாகி உள்ள செயல் அலுவலர் ராஜகோபால் பதவி உயர்வு பெற்று, திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சிக்கு பணி மாறுதலாக செல்ல இருந்தார். இந்த நிலையில் கடைசி நாளான நேற்று அலுவலகம் வந்த நிலையில் ராஜகோபால் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். பதவி உயர்வு கிடைத்த அரசு ஊழியர், டிரான்ஸ்ஃபர் ஆகும் கடைசி நாளில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான சம்பவம் கரூர் மாவட்ட அரசு ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications