பிஞ்சு குழந்தை செத்து போச்சே! விஜய விடுங்க..அஜித், தனுஷ் யாருனு குழந்தைக்கு தெரியுமா? அம்பிகா ஆறுதல்
கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த குழந்தைகளை நினைக்கும் பொழுது மிகவும் வேதனை அடைந்துள்ளதாகவும், அந்த வேதனையின் எதிரொலிதான் தற்போது நான் இங்கு வந்துள்ளேன், இதற்காக எந்த ஒரு அரசியல் சாயமும் தயவு செய்து எடுத்துக் கொள்ள வேண்டாம் என கூறியுள்ளார் நடிகை அம்பிகா. மேலும், விஜய், அஜித், தனுஷ் என்றால் யாரென்றே தெரியாத பிஞ்சு குழந்தைகள் நெரிசலில் சிக்கி பலியானது வேதனையை மேலும் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
கடந்த மாதம் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்டம் நெரிசலில் சிக்கி சுமார் 41 பேர் இறந்த நிலையில், இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் தலையிட்டு எஸ்ஐடி விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் அதனைத் தொடர்ந்து தனிநபர் ஆணையம் மற்றும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு தொடங்கியுள்ளது. இதற்கிடையே சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுசாமிபுரத்தில், நடிகை அம்பிகா நேரில் பார்வையிட்டு சம்பவத்தில் பலியான அப்பகுதியைச் சேர்ந்த துரு விஷ்ணு என்ற சிறுவனின் பெற்றோர் விமல் மாதேஸ்வரி தம்பதியை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கரூர் கூட்ட நெரிசல்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்," நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்து நான் இங்கு வரவில்லை. சம்பவத்தால் மனதளவில் பாதிக்கப்பட்டு அதை அறிந்து இங்கு வந்துள்ளேன். தயவுசெய்து இதை எவ்வித அரசியல் காரணங்கள் இல்லை. இச்சம்பவத்தில் பலியானவர்கள் என் பேரக் குழந்தைகளாக கூட இருக்கலாம். என் குழந்தைகளாக கூட இருக்கலாம். இறந்தவர்கள் என் அண்ணனோ தம்பியோ சகோதரியோ சித்தியோ உறவினர்களோ யாராக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம்.
நடிகை அம்பிகா
நான் யாரையும் குறை சொல்ல இங்கு வரவில்லை. இவர்கள் இப்படி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவர்கள் அப்படி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் சொல்ல வரவில்லை. குடும்பத்தில் உள்ளவர்கள் அங்கு செல்ல வேண்டாம். கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்று சொல்லி டிவியில் உட்கார்ந்து பாருங்கள் என்று குடும்பத்தில் உள்ளவர்கள் யாரோ ஒருவர் சொல்லி இருக்கலாம். ஆனால் ஒன்றரை வயது குழந்தையை தூக்கிக் கொண்டு விஜய் யார் என்று தெரியுமா? அஜித், தனுஷ் யார் என்று தெரியுமா? ஒன்றும் தெரியாத நிலையில் இது போன்ற நெரிசல்கள் சிக்கி இழப்புகள் ஏற்படும் போது வேதனை அளிக்கிறது.
41 பேர் பலி
மேலும் நடந்து முடிந்ததை பற்றி பேசி எந்த பயனும் இல்லை. நம் கையிலும் தவறு உள்ளது. அவர்கள் சொன்ன நேரத்திற்கு வரவில்லை. நினைத்தது நடக்கவில்லை என்றால் கூட்டம் வேண்டாம். நாங்கள் கூட்டத்திற்கு அனுமதி தர மாட்டோம். நீங்கள் கூட்டம் பண்ணாதீங்க.. ஒரு முடிவு எடுப்பது அல்லது கலந்து யோசிப்பது போன்ற பண்ணிக் கொள்ளட்டும். நான் மிகவும் பயந்தது, கூட்டம் நடக்கும் பொழுது மின்கம்பிகள் ஏதாவது அறுந்து கீழே விழுந்து விடுமோ என்று மிகப்பெரிய அச்சம் எனக்கு எப்பொழுதுமே உண்டு.
சிறுவர் உயிரிழப்பு
இந்த உலகத்திலேயே நான் அதிகமாக பயப்படுவது மின்சார விபத்து. இது போன்ற கூட்டத்தில் எங்காவது ஒரு இடத்தில் மின்சார கம்பிகள் அறுந்து கீழே விழுந்தால் என்ன சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் ஆண்டவன் புண்ணியத்தில் அதுபோன்ற அசம்பாவிதம் நடக்காமல் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன். இனிமேல் வரப்போகிற எல்லா மாநாட்டிற்கும் எந்த கூட்டத்திலும் எந்த சம்பவம் நடக்க கூடாது. யாராவது செல்கிறார்கள் என்றால் கூட தயவு கூர்ந்து செல்ல வேண்டாம் அப்படி மீறி செல்கிறார்கள் அவருடைய பாதுகாப்பை அவர்களை உறுதி செய்து கொள்ளட்டும்.
குழந்தைகள் மரணம்
பெண்கள் குழந்தைகள் வீட்டில் இருந்தபடி டிவியில் பாருங்கள். இது போன்ற சம்பவங்கள் இனி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இனி எங்குமே நடக்கக்கூடாது. நடப்பதற்கு நாம் அனுமதிக்க கூடாது. யாராவது ஒருவர் என்னிடம் போகக் கூடாது என்று சொன்னால் போகக்கூடாது அது போன்ற கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் அதையும் மீறி செல்வர்கள் சம்பவங்கள் ஏற்படும் பொழுது ஐயோ அவர்கள் சொன்னார்களே நாம் மீறி சென்று இப்படி இழந்து விட்டோமே என்று அதைக் கூறி பிரச்சனை செய்வது வேண்டாம். இறந்த குழந்தைகளை நினைக்கும் பொழுது என் மனம் மிகவும் வேதனை அடைந்துள்ளதாகவும் அந்த வேதனையின் எதிரொலிதான் தற்போது நான் இங்கு வந்துள்ளேன். இதற்காக எந்த ஒரு அரசியல் சாயமும் தயவு செய்து எடுத்துக் கொள்ள வேண்டாம்." என்றார்.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா?












Click it and Unblock the Notifications