முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சேஸிங்.. மணல் கடத்திய லாரியை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தார்!
கரூர்: கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்திய லாரியை சுமார் 18 கி.மீ தூரம் காரில் துரத்திச் சென்று பிடித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
லாரியை மடக்கி, வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மணல் கடுத்தலை திமுக அரசு தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஆறுகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவது தொடர்ந்து வருகிறது. சட்டவிரோத மணல் திருடர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை என்பது எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
கரூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் சட்டவிரோத மணல் கொள்ளை அதிகளவில் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. அண்மையில், திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் அமைத்த ஸ்பெஷல் டீம், மணல் கடத்தலில் ஈடுபட்ட 26 லாரிகளை மடக்கியது.
இந்நிலையில் இன்று கரூர் மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிக்காக காரில் சென்று கொண்டிருந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். மண்மங்கலம் அருகே மணல் கடத்தல் லாரியை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காரில் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலை செக் போஸ்ட்டில் முறைகேடாக மணல் கடத்திச் சென்ற லாரியை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், துரத்திச் சென்று தடுத்து நிறுத்தினார்.
அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் மணல் கடத்தல் சம்பவம் அப்பகுதியில் நடைபெறாததால் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீசில் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து அந்த லாரியை வேலாயுதம்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications