பொதுவெளியில் ஆபாசமாக பேசிய பாஜக தலைவர்.. கண்கள் சிவந்த ஜோதிமணி எம்பி.. உடனே பாய்ந்த வழக்குகள்
கரூர்: பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் கரூர் மாவட்டத் தலைவர் செந்தில் நாதன், கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தொடர்பாகச் சில சர்ச்சை கருத்துகளைக் கூறியிருந்தார். அவரது வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைப் பதிவிட்டு வருகிறார்கள். இதற்கிடையே இந்த விவகாரத்தில் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பாஜக சார்பில் கடந்த 10ம் தேதி பெண்களுக்கு எதிராக திமுக ஆட்சியில் நடக்கும் அநீதிக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் போராட்டம் நடந்தது. கரூரில் நடந்த இந்தப் போராட்டத்தில் கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் செந்தில் நாதன் கலந்து கொண்டார். அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய செந்தில் நாதன், சில சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறியிருந்தார்.

ஜோதிமணி
ஜோதிமணியை நாடு கடத்த வேண்டும் என்று சொன்ன செந்தில் நாதன், மேலும் சிலர் ஆபாசமான மற்றும் அருவருக்கத்தக்க கருத்துகளையும் அந்த கூட்டத்தில் பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களாக இணையத்தில் வேகமாகப் பரவியது. பல்வேறு தரப்பினரும் செந்தில் நாதன் பேச்சுக்குக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
வழக்குப்பதிவு
கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும் இந்த விவகாரத்தில் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். செந்தில் நாதன் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிய சூழலில், அதன் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜோதிமணி குறித்து அவதூறாகப் பேசிய கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கண்டனம்
முன்னதாக ஜோதிமணியும் தன் மீதான அவதூறு பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "பாஜகவின் கரூர் மாவட்ட தலைவர் செந்தில் நாதன் என்னைப் பற்றிப் பேசிய இந்த ஆபாசமான, அருவெறுக்கத்தக்க, வீடியோவை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்ற மன உறுதியோடுதான் இங்கு வெளியிடுகிறேன். அப்பொழுதுதான் சமூகம் இப்படிப்பட்ட அழுகிப்போன மனநிலை உள்ள ஆண்களுக்கு எதிராக காட்டமான எதிர்வினையாற்ற முடியும்.
இவரைப் பொறுத்தவரையில் வீட்டுப்படிதாண்டி பொதுவெளியில் பொதுவாழ்வில் பங்கேற்கிற பெண்கள் எல்லோருமே வேசிகள் தான். அவர்களுக்கு சொந்த திறமை, உழைப்பு, அனுபவம்,கண்ணியம் எதுவுமே இருக்காது, இருக்கக்கூடாது என்று நினைக்கிறார். ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து தனியொரு தாயால் கண்ணியத்தோடும், நேர்மையோடும், துணிச்சலோடும், மதிப்பீடுகளோடும் வளர்க்கப்பட்ட ஒரு பெண் நான். எங்கள் குடும்பத்தில் யாரும் பொதுவாழ்வில் இருந்ததில்லை. அரசியல் என்றாலே அச்சப்படுகின்ற எத்தனையோ குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று.
அரசியல் பயணம்
நான் எனது 21 வயதில் துணிச்சலோடு பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்தேன். ஒரு ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அநீதிக்கு எதிராக, மக்களுக்காகப் போராடும் போராட்டக்குணத்தால், சமரசமற்ற நேர்மையால், ஒரு பெண் என்பதால், அரசியல் பின்னணியோ, பெரிய அளவிலான பொருளாதார பலமோ இல்லாத காரணத்தால், வழிகாட்டுவதற்கு யாரும் இல்லாத சூழ்நிலையால் எத்தனையோ இடர்ப்பாடுகளை, தடைகளை, கடினமான காலகட்டங்களை எதிர்கொண்டிருக்கிறேன். இன்னும் எதிர்கொள்கிறேன்.
ஆனால் எதற்காகவும் தேங்கிவிடாமல் எனக்கு முன்பு இந்த கடினமான பாதையில் பயணித்து,சாதித்த எத்தனையோ கோடி பெண்களைப் போல, நானும் தடைகளை உடைத்துக் கொண்டு எனது பயணத்தை தொடர்கிறேன். பத்தாண்டு காலம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், அடுத்த பத்தாண்டு காலம் இளைஞர் காங்கிரசின் தேசிய பொது செயலாளர் உட்படப் பல்வேறு மாநிலங்களில் கட்சிப்பணி, ஐந்து ஆண்டு காலம் அரசியல் வனவாசம், சமூகப் பணி. 20 ஆண்டு கால கடுமையான , நேர்மையான அர்ப்பணிப்பு மிகுந்த அரசியல், சமூகப்பணிக்குப் பின்பே நாடாளுமன்ற உறுப்பினர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது.
போட்டியிட வாய்ப்பு
எங்கள் கட்சியிலேயே கூட பணம் இல்லை என்பதால் எனக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால் எனது தலைவர் சாதாரண கட்சி தொண்டர்களின் உழைப்பை மதிக்கக்கூடியவர். பத்தாண்டு காலம் எனது கடும் உழைப்பை,சமரசமற்ற துணிச்சலான அரசியல் நிலைப்பாடுகளை நேரில் பார்த்தவர், எனது மக்கள் பணியை,கொள்கை நிலைப்பாட்டை ,சமூக அக்கறையைப் புரிந்துகொண்டவர். அதனால் கரூரில் போட்டியிடக் கூடிய வாய்ப்பை எனக்கு வழங்கினார்.
"எனக்கு நடந்தது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல.இந்த நாட்டில் பொது வெளிகளில் நுழையும் பெண்கள் காலம்காலமாக தொடர்ந்து எதிர்கொள்ளும் ஒரே மாதிரியான, தனிமனித,ஆபாசத் தாக்குதல்களின் தொடர்ச்சியே இது. பெண்கள் பொது இடத்திற்கு வந்தால், நம் குரலை உயர்த்தினால், அதிகாரத்தை கேள்வி கேட்டால், மௌனமாக இருக்க மறுத்தால் அதற்கான எதிர்வினை இப்படித்தான் இருக்கிறது.
எதிர்க்க வேண்டும்
பெண்கள் மட்டுமல்லாமல் ஒரு சமூகமாக இதுபோன்ற இழிசெயல்களை, அழுகிப்போன மனநிலையை, ஆபாச தாக்குதல்களை,பெண்களுக்கு எதிரான அரசியல் சித்தாந்தங்களை நாம் எதிர்க்க வேண்டும், கேள்வி கேட்க வேண்டும், சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவேண்டும். அப்பொழுதான் பெண்களுக்கு எதிரான ஆபாசத்தாக்குதலை ஒரு ஆயுதமாகக் கையில் எடுப்பதை நாம் தடுத்து நிறுத்தமுடியும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
-
சமாதானமாகும் அண்ணாமலை?.. பேட்மிண்டன் மைதானத்துக்கே தேடிப்போன மத்திய அமைச்சர்! பின்னணி -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
புட்டு புட்டு வைத்த சந்திரசேகர்.. பிசினஸ் நடக்குதா? காங்கிரஸில் அதிர்ச்சி! வாயடைத்து போன ஜோதிமணி












Click it and Unblock the Notifications