உனக்கு இவ்வளவு சொத்தா.. என் மகனை அடித்து உதைத்தார் செந்தில் பாலாஜி.. கரூரிலிருந்து ஒரு தாயின் கதறல்
செந்தில் பாலாஜி மீது ஆட்கடத்தல் புகாரினை மூதாட்டி ஒருவர் கூறியுள்ளார்.
Recommended Video
கரூர்: "உனக்கு இவ்வளவு சொத்து வேணுமான்னு கேட்டு என் மகனை அடிச்சு உதைச்சு.. போதை பொருளை குடுத்து.. 25 கோடி மதிப்பு சொத்துக்களை செந்தில் பாலாஜி பிடுங்கிட்டார்" என்று ஒரு அம்மா கதற கதற புகார் சொல்லி உள்ளார்.
அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் என்று பல புகார்கள் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் ஆள்கடத்தல் புகார் ஒன்று வந்துள்ளது.
கரூர் குளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வானை. இவரது வளர்ப்பு மகன் கோகுல். இவர்களுக்கு சில ஏக்கர் நிலம், மற்றும் சொத்துக்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

8 வருடம்
இந்நிலையில் தெய்வானை செய்தியாளர்களிடம் கண்ணீர் வடித்து சொன்னதாவது: "என் பேரு தெய்வானை. நான் வளர்த்த மகன்தான் கோகுல். 2011 ஆம் ஆண்டு என் பையனை, திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கடத்திட்டு போய்ட்டார். ஆனா 8 வருஷமா என் மகன் திரும்ப கிடைக்கவே இல்லை.

25 கோடி ரூபாய்
செந்தில் பாலாஜி ஆளுங்க என் பையனை அடிச்சு உதைச்சு.. கடத்திட்டு போய், போதைப்பொருளை வலுக்கட்டாயமாக குடுக்க வச்சிருக்காங்க. மயக்கநிலையில் கையெழுத்து வாங்கிட்டாங்க. 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் புடுங்கிட்டு போய்ட்டாங்க.

மதுரை ஐகோர்ட்
அப்படி ஏமாத்தி வாங்கின சொத்துக்களை செந்தில்பாலாஜி தரப்பினர் விற்க போனாங்க. அதை என் பையன் கேள்வி கேட்டான். இதனால் ஆத்திரமடைந்த செந்தில்பாலாஜியும் அவரது தம்பியும், கோகுலை மிரட்டிட்டே வந்தாங்க. அப்பறம் திடீரென என் மகனை காணோம். அன்னைக்கு போனவன்தான்.. இன்னைக்கு வரைக்கும் கிடைக்கவில்லை. பையனை மீட்டுத் தரக்கோரி மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கிறேன்" என்றார்.

புது சந்தேகம்
இந்த விஷயத்தில் மூதாட்டி தெய்வானை சொல்வதில் எந்த அளவுக்கு உண்மை, பொய், நியாயம் உள்ளது என்பதை நீதிமன்றம்தான் விசாரித்து சொல்ல முடியும், அதே சமயத்தில், தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிலும் அரவக்குறிச்சி செந்தில் பாலாஜிதான் வெற்றி பெறுவார் என்று உறுதியாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. இந்த நேரத்தில் 8 வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு சம்பவத்தை இப்போது கிளப்பி கொண்டு வருவது சந்தேகத்தை ஏற்டுத்துகிறது.

நீதிமன்றம்
ஒருவேளை செந்தில்பாலாஜி மீது ஆட்கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்டது உறுதியானால் தகுதிநீக்கம் செய்யப்படுவாரா என்பதும் பலநூறு கேள்விதான். அதனால் இந்த விவகாரத்தை கண்டுகொள்ளாமலும் போய்விட முடியாது. நீதிமன்றம் துணை இருக்கிறது.. பார்ப்போம்!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications