கி.வீரமணி எதிரே டக்கென வந்த மாரியம்மா.. திரண்ட கூட்டம்.. வேனுக்குள்ளேயே 10 நிமிஷம்.. இதுதான் மாண்பு
திராவிடர் கழக கி.வீரமணி கரூர் மாரியம்மன் கோயில் விழா ஊர்வலத்துக்கு வழிவிட்டார்
கரூர்: திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயணக் பொதுக் கூட்டம் கடந்த 3ம் தேதி நாகர்கோவிலில் தொடங்கி 25ம் தேதி சென்னையில் முடிவடைகிறது.
தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்வி கொள்கை, உழைக்கும் மக்களுக்கு எதிராக மாநில உரிமைகளை பறிக்க கூடாது என்ற 3 முக்கிய பிரச்சனைகளை வலியுறுத்தி இந்த பொதுக்கூட்டம் நடந்து வருகிறது.. காஞ்சிபுரம், விழுப்புரம் என ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் பாஜகவை சரமாரியாக விமர்சித்து வருகிறார் கி.வீரமணி...

பார்ப்பனர்கள்
குறிப்பாக, "பார்ப்பனர்கள் தனக்கு கீழே இருக்கும் ஜாதிகளை அவர்கள் யாரும் படிக்கக் கூடாது, படித்தால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்த வேண்டும், அத்துமீறி படித்தால் கடுமையான தாக்குத நடத்துபவர்கள்தான் தான் இந்த பார்ப்பனர்கள்.. நூறு வருடம் ஆனாலும் சரி, பாஜக கட்சியால் தமிழகத்தில் காலூன்ற முடியாது. திராவிட கட்சிகள் மட்டுமே தமிழகத்தை ஆட்சி செய்ய முடியும்.. இந்தியாவில் ஒரே தேர்வு, ஒரே மதம், ஒரே கல்விக்கொள்கை, ஒரே தேர்தல் என்று சொல்லிவரும் பாஜக ஒரே சாதி என்று சொல்ல முடியுமா? தமிழகத்தில் உள்ள ராஜ்பவன் அலுவலகம் தற்பொழுது ஆர்எஸ்எஸ் அலுவலகமாக மாறிக் கொண்டு வருகிறது" என்றெல்லாம் பேசி வருகிறார்.

கரூர் கூட்டம்
அந்த வகையில் கரூர் கூட்டத்திலும் கி.வீரமணி பேசினார்.. "நீட்' தேர்வை ஏன் எதிர்கிறோம் என்பதை முழுவதுமாக விளக்கமாக போட்டுள்ளோம். திராவிட மாடல் என்பதற்கு அடிப்படை சமூக நீதி கட்சி தான். எதை கொடுத்தாலும் கீழ் ஜாதியினருக்கு கொடுக்க கூடாது என்ற நிலை இருந்தது. 102 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார், காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகு தந்தை பெரியார் குருகுலத்தில் படித்தவன், நீதிகட்சியின் ஆட்சி என்றார்.

தேவ பாஷை
தமிழ் உலகளாவிய மொழி. சமஸ்கிருதம் தேவ பாஷை. அது செத்துப்போன மொழி. அப்போது யாரும் சமஸ்கிருதம் படிக்க முடியாது. சமஸ்கிருதம் என்றால் நன்றாக செய்யப்பட்டது என பொருள். 100 ஆண்டுக்குப் பிறகு மோடி புதுப்பிக்கிறார். அதன் அடிப்படை தான் நீட் தேர்வு உலகளவில் ஆராய்ச்சி செய்து கொடுத்த பெயர் தான் திராவிடன் மாடல். இந்திய மொழிகளிலும், வெளி நாட்டு மொழிகளிலும் பெரியாரின் வார்த்தைகள் மொழி பெயர்கிறோம்.

இடஒதுக்கீடு
நீட் தேர்வு நாம வேண்டாம் என்கின்ற நேரத்தில் புதிய கல்வி கொள்கை கொண்டு வருகிறார்கள். அது குலக்கல்வி திட்டத்தை மீண்டும் கொண்டு வர இருக்கிறார்கள். அண்ணாமலை ஐபிஎஸ் ஆனது இந்த கல்விக் கொள்கையில் தான் படித்தார். அனைவருக்கும், அனைத்தும் என்ற நோக்கில் தற்போது செயல்படுகிறது அரசு. தொடக்க கல்வி முதல் பல்கலைக் கழக படிக்கும் வரை இட ஒதுக்கீடு கிடையாது என்கிறது புதிய கல்விக் கொள்கை. ஆனால், தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஊக்கத் தொகை வழங்குகிறது தமிழக அரசு.

தபால்காரர் வேலை
புதிய கல்விக் கொள்கையில் 3 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நுழைவு தேர்வு வைக்கிறார்கள். ஆனால், அதை கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டோம் என்கிறார்கள். படிக்க கூடாது என்பதற்காக ஒரு கல்விக் கொள்கை அது புதிய கல்விக் கொள்கை. புதிய கல்விக் கொள்கையில் தோல்வி அடைந்தால் அப்பா, அம்மாவுக்கு தந்தைக்கு உதவிகளை செய்யுங்கள் என்கிறது... சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநர் மூலமாக குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும். ஆனால், ஆளுநர் அப்படியே திருப்பி அனுப்புகிறார். அவருக்கு அந்த வேலை கிடையாது. அவருக்கு வேலை தபால்காரர் வேலை.

அம்பானி, அதானி
அரசியல் சட்டத்தின் படி 2வது முறையாக அவருக்கு சட்டப்படி தீர்மானம் அனுப்பப்பட்டுள்ளது. அவர் செய்ய மறுக்கிறார்... அவர் தானாக செய்ய மாட்டார். டெல்லியில் இருந்த சொல்வதைதான் செய்கிறார். மோடி ஆட்சியில் தான், நாள் ஒன்றுக்கு 1000 கோடி சம்மாத்தித்தார்கள் என்றால் அம்பானி, அதானி மட்டுமே. விழிப்புணர்வு உருவாக்க வேண்டும், ஜனநாயகத்தை காக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருதி நாங்கள் கேட்கிறோம். மாநில அரசு சிறப்பாக செயல்பட முட்டுக் கட்டை போடுவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

மாரியம்மன்
நிகழ்ச்சியை முடித்து கொண்டு வீரமணி வேனில் ஏறி கிளம்பி சென்றார்.. அப்போது வழியில் நீலிமேடு அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய பூத்தட்டு ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது.. ஏராளமானோர், பக்திபரவசத்துடன் ஊர்வலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.. இதை பார்த்ததும், ஊர்வலத்திற்கு மதிப்பளித்த, கி.வீரமணி அப்படியே வேனை நிறுத்திவிட்டார்.. கிட்டத்தட்ட 10 நிமிடம் அவரது வேனுக்குள்ளேயே உட்கார்ந்திருந்தார்..
Recommended Video

வேனில் வீரமணி
வீரமணி வேனில் உட்கார்ந்திருந்ததால், அவருடன் வந்த திராவிட கழக தொண்டர்களும், ஊர்வலத்திற்கு மதிப்பளித்து அமைதி காத்தனர்.. ஊர்வலம் முழுமையாக முடிந்த பிறகே அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்... கடவுள் மறுப்பு கொள்கையை பிரதானமாக கொண்டு செயல்படும் திராவிடர் கழகம், கடவுளை வணங்குபவரின் உணர்வை புரிந்து கொண்டு நடந்தது, வியக்க வைத்து வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications