Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரூரில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது.. தொண்டர்கள் ஆரவாரத்துடன் மேடைக்கு வந்த ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் மாவட்டம் கோடங்கிபட்டியில் திமுக முப்பெரும் விழா இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. மழை பெய்தாலும் கூட மேடைக்கு வந்த ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முப்பெரும் விழாவில் சிறந்த நிர்வாகிகள் 16 பேருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கனிமொழி எம்பிக்கு பெரியார் விருது வழங்கி கவுரவித்தார்.

திமுக முப்பெரும் விழா இன்று கரூர் கோடங்கிபட்டியில் நடந்து வருகிறது. திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.

dmk-mega-event-begins-massive-gathering-in-karur-periyar-award-for-kanimozhi

ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாவட்டத்தில் நடந்து வருகிறது. அந்த வகையில் தான் இன்று திமுக முப்பெரும் விழா கரூர் மாவட்டத்தில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. இந்த முப்பெரும் விழாவிற்காக 1 லட்சம் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. பல்வெறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனர். தொண்டர்களுக்கு தின்பண்டங்களும் இருக்கைகளில் வைக்கப்பட்டிருந்தன.

மாலை 5 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் முப்பெரும் விழா நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார். அப்போது ஸ்டாலின் வரும் வழியில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டத்திற்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலின் வருவதற்காக வழி அமைக்கப்பட்டு இருந்தது. அப்போது இருபுறமும் கூடியிருந்த தொண்டர்கள் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து மேடைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் அண்ணா, பெரியார், கருணாநிதி, அன்பழகன் படங்களுக்கு பூக்கள் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சிறந்த நிர்வாகிகள் 16 பேருக்கு விருதுகளை முதல்வர் ஸ்டானின் வழங்கினார். இதேபோன்று கனிமொழி எம்பிக்கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் பெரியார் விருது வழங்கி கவுரவித்தார். பாளையங்கோட்டை நகர் மன்ற முன்னாள் தலைவர் சீத்தாராமனுக்கு பேரறிஞர் அண்ணா விருதை வழங்கி ஸ்டாலின் கவுரவித்தார். முதல்வர் ஸ்டாலின் வந்த பிறகு மழை பெய்தாலும் கூட தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+