கரூர் புதிய பேருந்துநிலையம்... மீண்டும் கெடு விதித்த செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.
கரூர்: கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையை வரும் 21-ம் தேதிக்குள் தொடங்காவிட்டால் தனது தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடக்கும் என செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.எச்சரித்துள்ளார்.
20 மாதங்களுக்குள் கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக செயல்படுகிறது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கரூரில் நடைபெற்ற திமுக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

போராட்ட அறிவிப்பு
கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அது தொடர்பாக பல முறை திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், எம்.எல்.ஏ.வும், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மிகப்பெரும் போராட்டம்
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை வரும் 21-ம் தேதிக்குள் தொடங்க வேண்டும் எனவும், இல்லையென்றால் மாவட்ட நிர்வாகத்தையும், அரசையும் கண்டித்து மிகப்பெரும் போராட்டத்தை நடத்துவேன் என்றும் செந்தில்பாலாஜி கெடு விதித்துள்ளார்.

அலட்சியம்
புதிய பேருந்து நிலையம் அமைக்கும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து 9 மாதங்கள் ஆகிவிட்டன என்றும், ஆனாலும் இதுவரை அதற்கான பணிகளில் ஒரு சதவீதம் கூட தொடங்கவில்லை எனவும் செந்தில்பாலாஜி குற்றஞ்சாட்டினார். மேலும், மாவட்ட நிர்வாகம் அலட்சியப் போக்குடன் உள்ளதாக சாடினார்.

அமராவதி
செந்தில்பாலாஜி மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் அறிவித்து கெடு விதிப்பது இது 2-வது முறையாகும். 3 மாதங்களுக்கு முன்பு அமராவதியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும் எனக் கூறி இதேபோல் கெடு விதித்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications