கோடு போட சொன்னால் ரோடு போட்டிருக்கிறார்.. கரூர் விழாவில் ஸ்டாலின் சொன்னதுமே செந்தில் பாலாஜி கொடுத்த ரியாக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

கரூர்: திமுக முப்பெரும் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 2026 தேர்தலிலும் திமுக வெற்றி தொடரும்.. என்று பேசினார். மேலும், மேற்கு மண்டலத்தின் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக செந்தில் பாலாஜி உள்ளார். பொதுக்கூட்டம் என்று சொல்லி மாபெரும் எழுச்சி கூட்டத்தை கூட்டியிருக்கிறார் செந்தில் பாலாஜி. செந்தில் பாலாஜி கோடு போட சொன்னால் ரோடு போட்டிருப்பதாக ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

திமுக முப்பெரும் விழா இன்று மாலை கரூரில் தொடங்கியது. அப்போது கொட்டும் மழையிலும் தொண்டர்கள் உற்சாகத்துடன் இருந்தனர். முதல்வர் ஸ்டாலின் வரும் போது இருபுறமும் நின்ற தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன்பிறகு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-

DMK dmk mupperum vizha MK Stalin Other Tags

16 வயதில் கொடி பிடித்த என்னை தலைவர் ஆக்கியதும், முதல்வர் ஆக்கியதும் நீங்கள் தான். மேற்கு மண்டலத்தின் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக செந்தில் பாலாஜி உள்ளார். பொதுக்கூட்டம் என்று சொல்லி மாபெரும் எழுச்சி கூட்டத்தை கூட்டியிருக்கிறார் செந்தில் பாலாஜி. செந்தில் பாலாஜி கோடு போட சொன்னால் ரோடு போட்டிருக்கிறார்.

பெரியாரின் பேத்தியாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பவர் கனிமொழி.. பெரியார் விருது பெற்றுள்ள கனிமொழி நாடாளுமன்றத்தில் பேசினால் கர்ஜனை மொழி.. பெரியாரின் பேத்தியாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பவர் கனிமொழி..

திமுகவின் கொள்கையாளர்களுக்கு விருது வழங்கி மரியாதை செய்யப்பட்டுள்ளது. திறமை, உழைப்பு, அறிவு, ஆற்றல் ஆகியவற்றை ஒருங்கிணைந்து கொண்டுள்ள கூட்டம் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தினர். கடந்த அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக தான் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். 74 வருஷ வரலாறு இருக்கு. ஈராயிரம் ஆண்டுகளாக காவி சக்தியோடு நாம் போராடி வருகிறோம்.. 2026 தேர்தலிலும் திமுக வெற்றி தொடரும்..

இப்போதும் சில பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நாங்க தான் திமுகவுக்கு மாற்று என்று.. என்ன மாற்றப்போறாங்க.. தமிழகத்தின் வளர்ச்சியை பின்னோக்கியாக இழுத்து செல்லப்போகிறார்கள்.. மாற்றம் மாற்றம் என்று அவர்கள் தான் மாறிப்போனார்கள்.. நாம் எவ்வளவோ நெருக்கடியில் ஆட்சி பொறுப்பை ஏற்றோம். ஒரு பக்கம் நிதி நெருக்கடி, மறுபுறம் கொரோனா என பெரும் நெருக்கடியில் ஆட்சி பொறுப்பு ஏற்று.. இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகத்தினை மாற்றியிருக்கிறோம்.

இதனால் தான் திராவிட மாடல் அரசை பார்த்து சில பேருக்கு வயிறு எரிகிறது.. பழனிசாமி தன்னிடம் ஆட்சி அதிகாரம் இருக்கும் போது தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாமல், பாஜகவுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்தாங்க.. நாட்டிலேயே முதலில் ஆட்சியை பிடித்த கட்சி திமுக.. யாருக்கும் பயப்பட மாட்டோம்.. எதிர்க்கட்சி தலைவருக்கான மாண்பை அறியாதவர் எடப்பாடி பழனிசாமி. இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+