கரூரில் ரெய்டு.. ரியல் எஸ்டேட் அதிபருக்கு ‘குறி’? கணக்கு வழக்கு நோட்டை தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!
கரூர்: கரூரில் ரியல் எஸ்டேட் அதிபர் ரமேஷ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டnனர். கரூரில் திட்ட மதிப்பீடு அதிகாரியாக பணியாற்றிய மூக்கையா என்பவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்து வருகிறது. மூக்கையாவுடன் தொடர்புடைய ரியல் எஸ்டேட் அதிபர் ரமேஷ் வீட்டிலும் சோதனை நடந்துள்ளது.
கரூர் நகர் பகுதியில் பிளானிங் அப்ரூவல் அதிகாரியாக பணியாற்றிய மூக்கையா பணி மாறுதல் செய்யப்பட்டு தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மூக்கையாவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையானது அவருக்கு நெருக்கமான இடங்களில் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டம் காணியாளம்பட்டி பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் ரமேஷ் என்பவர் வீட்டில் தற்போது சோதனை நடைபெற்றது.
ரியல் எஸ்டேட் அதிபர் ரமேஷ், மூக்கையாவின் மகன் வெங்கடேசனின் தொழில் பங்குதாரர் ஆவார். காலை 8 மணிக்கு சோதனை தொடங்கிய சோதனை மாலை 5 மணி அளவில் நிறைவடைந்தது. சுமார் 9 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரியல் எஸ்டேட்டில் மூக்கையாவின் மகன் வெங்கடேசன் மற்றும் அவரது தொழில் பங்குதாரர் ரமேஷ் ஆகிய இருவரும் மேற்கொண்ட கணக்கு வழக்குகள் அடங்கிய நோட்டுகளும், பல்வேறு சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சோதனை கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ஸ்ரீபெரும்புதூரில் வருமான வரித்துறையினரின் சோதனை தொடர்ந்து வருகிறது. இவை ஒருபுறமிருக்க மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கரூர் பகுதியில் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications