கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை.. சிக்கப்போவது யார்?
கரூர்: மல்லம்பாளையத்தில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். மணல் குவாரியில் இருந்து அள்ளப்பட்ட மணலின் அளவு குறித்து அதிகாரிகள் கணக்கிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி வருகின்றனர். கடந்த மாதம் மணல் குவாரி, மணல் கொள்ளை, சட்டவிரோத சுரங்க முறைகேடு உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.

சென்னை, திண்டுக்கல், திருச்சி, கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், தி.மலை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் விளாத்திகுளத்தில் ஆகிய ஊர்களில் சோதனை நடை பெற்றது.
கடந்த மாதம் 12ஆம் தினம் ரியல் எஸ்டேஸ் பிசினஸ் செய்யும் சண்முகம் என்பவருக்கு சொந்தமான வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ரியல் எஸ்டேட் தொழிலில் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக வரப்பட்ட புகார்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை தியாகராய நகரில் உள்ள விஜய் அபார்ட்மெண்ட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். திருச்சி, தஞ்சாவூரிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.

இந்த நிலையில் இன்றைய தினம் கரூர் அருகே மல்லம்பாளையத்தில் உள்ள அரசு மணல் குவாரிக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தொழில்நுட்ப அதிகாரிகளுடன் வந்திருக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள், மணல் எடுக்கப்பட்ட அளவு குறித்து கணக்கிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்!












Click it and Unblock the Notifications