அரவக்குறிச்சியில் வரலாறு காணாத பெரும் தோல்வி காத்திருக்காம்.. யாருக்கு தெரியுமா?
திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: அரவக்குறிச்சியை பொறுத்தவரைக்கும் அதிமுக மண்ணை கவ்வும் என்றும் திமுக எக்கச்சக்க வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றும் நித்தம் ஒரு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அரவக்குறிச்சியை பொறுத்தவரை அதிமுக, திமுக, அமமுக கட்சிகள் பலமான வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இருந்தாலும் ஒத்தைக்கு ஒத்தை சவால் திமுகவுக்கும், அதிமுகவுக்கும்தான்! இதற்கு ஒரே காரணம் செந்தில்பாலாஜியே!
தேர்தல் பணிகளை பொறுத்தவரை அதிமுக தரப்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்களது வேலை, அதிமுக வேட்பாளரை வெற்றி பெற வைப்பது, செந்தில்பாலாஜி வியூகங்களை தடுப்பது, வாக்காளர்களுக்கு பணம் தந்தால் அதை வீடியோவாக பிடித்து சாட்சியாக தேர்தல் ஆணையத்தில் ஒப்படைப்பது, முடிந்தால் தேர்தலையே நிறுத்திவிடுவது!

களப்பணி
திமுகவை பொறுத்தவரை தேர்தல் பணிகள் பக்கா பிளானில் உள்ளது. சொந்த ஊரில் செந்தில்பாலாஜிக்கு ஆதரவாளர்கள் நிறைய பேர் உண்டு. இருந்தாலும், வெளியூர் திமுக நிர்வாகிகளையம் தேர்தல் பணியில் அமர்த்தி உள்ளது திமுக தலைமை. இதை தவிர தேர்தல் பொறுப்பாளர்கள் களப்பணியில் இறங்கிவிட்டார்கள். வாக்காளர்களிடம் செந்தில்பாலாஜி தந்து வரும் வாயை பிளக்கும் வாக்குறுதிகள்!

செந்தில் பாலாஜி
இப்படி இரு தரப்புமே சரிக்கு சமமாக தீவிரத்தை கையில் எடுத்தாலும், செந்தில் பாலாஜி பக்கமே வெற்றி இருப்பதாக உளவுத்துறை தரப்பில் தகவல் கசிகிறதாம். இதனால் எடப்பாடி தரப்பும், தினகரன் தரப்புமே கோபமாக இருக்கிறார்களாம்!

சிவசங்கர்
அரியலூர் திமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான சிவசங்கர் இதை பற்றி ஒரு வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூட இதை உறுதிபடுத்தி உள்ளார். "செந்தில்பாலாஜி தேர்தலை கையாளும் விதத்தை உள்ளூர் அதிமுகவினர் அக்குவேறு ஆணி வேராக தெரிந்துவைத்துள்ளனர். அதனால் செந்தில்பாலாஜியின் வேகத்துக்கு அதிமுகவினரால் ஈடுகொடுக்க முடியவில்லை.

தடுக்க முடியாது
அது மட்டும் இல்லை, போன 2011ல் வேட்பாளராக நின்று தோல்வி அடைந்தவர்தான் இப்போது அதிமுக வேட்பாளர்! அப்போது முதல் இப்போதுவரை தொகுதிக்குள் அவருக்கு நெருக்கமும் குறைவு! ஆரம்பத்தில் செந்தில் பாலாஜிதான் வெற்றி பெறுவார் என்று திமுக தரப்பு நம்பியது. ஆனால் இப்போ விஷயம் என்னவென்றால், செந்தில் பாலாஜி வெற்றியை எப்படியும் தடுக்க முடியாது என்பதை அதிமுகவினரே உணர்ந்துவிட்டார்கள்.. இதுதான் நிஜம்" என்றார்.












Click it and Unblock the Notifications