ஸ்டாலின் வீட்டிற்கே போய்விடுவேன்.. கரூரில் காலையிலேயே போதையில் இளம் பெண் அட்ராசிட்டி.. பாவம் போலீஸ்
கரூர்: தமிழ்நாடு முழுவதுமே மது போதையில் அட்ராசிட்டி செய்வது இப்போது பல ஊர்களில் அதிகரித்து விட்டது . போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் வம்பிழுக்கிறார்கள். அதன்பின்னர் மன்னிப்பு கேட்கிறார்கள். அந்த வகையில் இளம் பெண் ஒருவர் கரூரில் காலையிலேயே மது அருந்திவிட்டு போலீசாரை படாதபாடு படுத்தி உள்ளார். அவரை போராடி ஆட்டோவில் ஏற்றி போலீசார் அழைத்து சென்றனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
மது அருந்துவோர், பின்னர் வாகனங்களில் சென்றோ அல்லது சாலையில் நடந்து சென்றோ, அலப்பரை செய்வது அதிகரித்துவிட்டது. மதுபோதை உச்சத்தில் சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து, தகாத வார்த்தை பேசுவது ஆங்காங்கே நடக்கிறது. அண்மையில் கொடைக்கானலில் சுற்றுலா வந்த நபர், குடிபோதையில் நட்சத்திர ஏரியில், தாவி குதித்து நீச்சல் அடித்தார். கடும் குளிரில் ஒருவர் நட்சத்திர ஏரியில் குதிப்பதை பார்த்த உள்ளூர் மக்கள், அவருக்கு ஏதோ விபரீதம் நடந்ததாக நினைத்து அவரை காப்பாற்ற முயன்றனர்.

அப்போது தான் அவர் முழு போதையில், ஊர் நினைப்பில், தாவி குதித்தது தெரியவந்தது. ஒருவழியாக அவரை மீட்டு வந்து, ஏன் இப்படி செய்கிறாய் என்று போலீஸ் சத்தம் போட்ட போது, பேசக்கூடாத வார்த்தை எல்லாம் பேசி, சட்டையை கழற்றி, பனியனை சுழற்றி, எது ஏதோ பேசி வம்பிழுத்தார். போலீசார் அவரிடம் கோபத்தை காட்டாமல் பக்குவமாக பேசி, ஒருவழியாக போதை தெளிய வைக்க டீ எல்லாம் வாங்கி கொடுத்தனர். போதை தெளிந்த பின்னரே தான் என்னெவெல்லாம் செய்தோம் என்று அந்த நபருக்கு தெரிந்தது. அவரை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதேபோல் சென்னை போக்குவரத்து பிரிவில் காவலராகப் பணியாற்றிய ராணி என்பவரிடம் கடந்த 13ஆம் தேதி மாலை கோடம்பாக்கம் காவல் நிலையத்துக்குட்பட்ட ஆற்காடு சாலை பகுதியில் ஒருவர் வம்பிழுத்தள்ளார். பெண் காவலரின் கையைப் பிடித்து இழுத்திருக்கிறார். அநாகரீகமாக நடந்து கொண்ட அவரை சுற்றிநின்ற மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இப்படி பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளனர். வாகன சோதனையில் மது போதையில் சிக்கிய பலர், என்ன செய்கிறோம் என்று தெரியாமல் போலீசார் கேட்கக்கூடாத வார்த்தைகளை கேட்டு நோகடிப்பார்கள். அவர்களுக்கு போதை தெளிந்த பின்னர் சிறப்பு கவனிப்பும் இருக்கும்.
இந்நிலையில் மது போதையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அட்ராசிட்டி செய்வது அண்மைக்காலங்களில் அதிகரித்து வருகிறது. சென்னையில் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும். இப்போது கரூரில் நடந்துள்ளது. கரூரில் மெயின் ரோட்டில் பெண் ஒருவர் முழு மதுபோதையில் அமர்ந்து வாயில் வந்த வார்த்தைகளில் பேசி போலீசாரை பாடாய்படுத்துவிட்டார். தான் சென்னையில் தான் வேலை செய்வதாகவும், நேராக முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கே போய்விடுவேன் என்றும் போலீசை அதிரவைத்தார்.
மேலும் முதல்வர் ஸ்டாலின் வீடு தனக்கு தெரியாதா என்று போலீசை பார்த்து கேள்வி எழுப்பிய அந்த பெண், அவனை பிடிக்க வேண்டும் என்று உளறினார் (யாரோ ஒருவரால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது). தன்னை வேடிக்கை பார்த்தவர்களை வசைபாடிய அந்த பெண்.. கிளம்புங்கள் என்று கூறினார். இறுதியாக அந்த பெண்ணை பிடித்து ஆட்டோவில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டது. போதையில் உள்ளவர்களின் அட்ராசிட்டியால் அதிக தொல்லைகளை அனுபவிப்பது போலீஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications