நடுராத்திரி.. "சோளக்காட்டில்" சிவபாக்கியமும், ஆறுமுகமும்.. பரிதாபம்... அலறி அடித்து ஓடிய தோகைமலை!

கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது

Subscribe to Oneindia Tamil

கரூர்: நடுராத்திரி.. வயல்வெளியில் 2 பிணங்கள் கிடந்ததை கண்டுஊர் மக்கள் அலறி அடித்து ஓடினர்.. கரூர் மாவட்டம், தோகைமலையில்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அங்கு நல்லாகவுண்டம்பட்டி என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வருபவர்தான் ஆறுமுகம்.. 30 வயதாகிறது.. கல்யாணமாகிவிட்டது. மனைவியுடன் ஒரே வீட்டில்தான் வசித்து வருகிறார்.. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஆறுமுகம் ஒரு மாட்டு வியாபாரி.. அதே பகுதியில்தான் மாடு வியாபாரம் செய்து வந்துள்ளார்..

அப்போது சிவபாக்கியம் என்ற பெண் ஆறுமுகத்துக்கு பழக்கமாகி உள்ளார்.. இவருக்கு 28 வயதாகிறது.. கல்யாணமாகி, டைவர்ஸ் ஆனவர்..

 ஆறுமுகம்

ஆறுமுகம்

தனியாகவே ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.. ஒருகட்டத்தில் ஆறுமுகத்துடன் நெருக்கம் அதிகமானது.. இந்த விஷயம் ஆறுமுகத்தின் மனைவிக்கு தெரிந்துவிட்டது.. இதனால் இவர்களின் கள்ளக்காதலை அவர் கண்டித்துள்ளார்..

 தகராறு

தகராறு

எனினும் இந்த ஜோடி எதற்கும் அசரவே இல்லை.. நாளுக்கு நாள் மனைவி இதை வைத்து தகராறு செய்து கொண்டே இருந்ததால், கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர். அதன்படியே இரவு நேரம் வயல்வெளிக்கு போனார்கள்.. கையில் விஷ பாட்டிலை கொண்டு போனார்கள்.. 2 பேருமே விஷத்தை சாப்பிட்டனர்.. சிவபாக்கியம் விஷம் குடித்த உடனேயே அப்போதே, அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். ஆனால், ஆறுமுகத்துக்கு உயிர் போகவில்லை..

விஷம்

விஷம்

கண்ணெதிரே சிவபாக்கியம் மட்டும் துடிதுடித்து இறப்பதை பார்த்து பதறினார்.. விஷம் குடித்தும் உயிர் போகவில்லையே என்று நினைத்து, சிவபாக்கியத்தின் துப்பட்டாவை எடுத்து, அதை தன்னுடைய வேட்டியுடன் இணைத்து கட்டினார்.. பக்கத்திலேயே ஒரு மரம் இருந்தது.. அந்த மரத்தில் தூக்கு போட்டும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனிடையே நடுராத்திரி ஆகியும், கணவனை காணோமே என்று ஆறுமுகத்தின் மனைவி, ஊரெல்லாம் தேடி வந்தார்..

 விசாரணை

விசாரணை

உறவினர்களும் அவருடன் சேர்ந்து தேடி வரும்போதுதான், வயல்வெளியில் 2 பிணங்கள் கிடப்பதை கண்டு அலறினர்.. உடனடியாக தோகைமலை போலீசுக்கும் தகவல் பறந்தது.. விடிகாலை 3 மணிக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.. சடலங்களையும் மீட்டு குளித்தலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தோகைமலை காவல் நிலைய போலீஸார், விசாரணை நடத்திவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+