இது அக்னிப் பரிட்சை.. அமைதியாக இருங்கள்.. அரவக்குறிச்சி தாக்குதல் குறித்து கமல் டிவிட்!
நேற்று அரவக்குறிச்சியில் நடந்த முட்டை வீச்சு தாக்குதல் குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
கரூர்: நேற்று அரவக்குறிச்சியில் நடந்த முட்டை வீச்சு தாக்குதல் குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது முட்டை மற்றும் கற்கள் வீசப்பட்டது. ஆனால் போலீஸ் பாதுகாப்புடன் கமல்ஹாசன் அந்த இடத்தில் இருந்து வெளியேறினார். பிரச்சார கூட்டத்தில் இருந்து திரும்பும் போது இந்த சம்பவம் நடைபெற்றது.

கடந்த திங்கள் கிழமை அரவக்குறிச்சி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் பேசினார். கமல்ஹாசன் தனது பேச்சில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே, என்று குறிப்பிட்டார். கமல்ஹாசனின் பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு எதிராகத்தான் தற்போது கமல்ஹாசன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. நேற்று மீண்டும் மநீ ம சார்பாக அரவக்குறச்சி வேலாயுதம் பாளையத்தில் இந்த பிரச்சாரம் நடந்தது. அப்போது கமல்ஹாசன் பேச்சை முடித்துவிட்டு திரும்பும் போது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின் கீழே இறங்கி வந்த கமல்ஹாசனை நோக்கி முட்டை கற்கள் வீசப்பட்டது.
இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த இரண்டு பேர் இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இதுகுறித்து கமல்ஹாசன் டிவிட் செய்துள்ளார்.
கமல் தனது டிவிட்டில், ம.நீ.ம. குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் அன்பு வேண்டுகோள். நிகழும் சம்பவங்கள், நம் நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்னிப் பரிட்சை. ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும். மயங்காதீர்! அவர்களின் தீவிரவாதம் நம் நேர்மைவாதத்திற்கு முன் தோற்கும். நாளை நமதே!, என்று குறிப்பிட்டுள்ளார்.
ம.நீ.ம. குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் அன்பு வேண்டுகோள். நிகழும் சம்பவங்கள், நம் நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்னிப் பரிட்சை. ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும். மயங்காதீர்! அவர்களின் தீவிரவாதம் நம் நேர்மைவாதத்திற்கு முன் தோற்கும். நாளை நமதே!
— Kamal Haasan (@ikamalhaasan) May 16, 2019
கமல்ஹாசன் பேசியது வடஇந்தியாவில் வைரலானது. இதனால் இதே டிவிட்டை அவர் ஆங்கிலத்திலும் பகிர்ந்து இருக்கிறார். அவரது ஆங்கில டிவிட்டில் வடஇந்தியாவை சேர்ந்த ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகா சபா அமைப்பினர் கோபமாக பதில் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Dear MNM family and fans, this is an acid test for our decorum and demeanour. Do not listen to their noises and be drawn into their violence. They are extremists who are slighted by the Truth. Naalai Namadhey!
— Kamal Haasan (@ikamalhaasan) May 16, 2019
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications