கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விடுங்க விடுங்க.. சினிமாவில் வசனம் பேசுவதைப் போல் கமல் பேசிவிட்டார்.. டிடிவி தினகரன் அசால்ட்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சினிமாவில் வசனம் பேசுவதைப் போல் கமல் பேசிவிட்டார்.. டிடிவி தினகரன்-வீடியோ

    கரூர்: சினிமாவில் வசனம் பேசுவதைப் போல் நடிகர் கமல்ஹாசன் பேசிவிட்டார் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர்தான் நாதுராம் கோட்சே என்றும் கமல் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவரது பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருப்பதோடு, டெல்லி கோர்ட்டில் கிரிமினல் வழக்கும் தொடுக்கப்பட்டது.

    Kamal talked like cinema dialogue: TTV Dinakaran

    மேலும் கமலுக்கு எச்.ராஜா, தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, பிரேமலதா, நடிகர் விவேக் ஓபராய், நடிகை கஸ்தூரி உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    அதேபோல் கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, வைகோ உள்பட ஒருசில தலைவர்கள் கமல்ஹாசனின் கருத்தை ஆதரித்தும் உள்ளனர்.

    ரஜினிகாந்த் இதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.
    இந்த நிலையில் அரவக்குறிச்சி அமமுக வேட்பாளர் சாகுல் ஹமீதை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது கமலின் பேச்சு குறித்து டிடிவி தினகரன் கருத்து தெரிவித்தார்.

    தீவிரவாதிகள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள்.. மோடி பதிலால் புதிய சர்ச்சை தீவிரவாதிகள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள்.. மோடி பதிலால் புதிய சர்ச்சை

    இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது, 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல் பேசியது தவறு. திரைப்படத்தில் வசனம் பேசுவதைப் போல கமல் பேசிவிட்டார்.

    எந்த மதத்தையும் யாரும் புண்படுத்தக்கூடாது என்றும் டிடிவி தினகரன் கூறினார். அவர் இந்த கருத்தை அரவக்குறிச்சி அமமுக வேட்பாளர் சாகுல் ஹமீது முன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    TTV Dinakaran says Kamal talked like cinema dialogue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X