‛‛நேரில் சந்திக்க முடியலை’’..செந்தில் பாலாஜிக்கு வருத்தத்தோடு ஜோதிமணி நன்றி! போட்டோ தான் ஹைலைட்
கரூர்: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியுடன் சேர்ந்து இருக்கும் போட்டோவை கரூர் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வருத்தத்தோடு நன்றி தெரிவிக்கும் வகையில் பதிவிட்டுள்ள போஸ்ட் கவனம் பெற்றுள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கரூர் தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் ஜோதிமணி 5,34,906 ஓட்டுகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் தங்கவேல் 3,68,090 ஓட்டுகளும், பாஜக வேட்பாளர் செந்தில் நாதன் 1,02,482 ஓட்டுகளும், நாம் தமிழர் வேட்பாளர் கருப்பையா 87,503 ஓட்டுகளும் பெற்றனர்.

இதன்மூலம் அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 1,66,816 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் கரூர் எம்பியாகி உள்ளார். இந்நிலையில் தான் ஜோதிமணி தனது தொகுதியில் வலம் வந்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த முறை கரூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க கூடாது. திமுகவே போட்டியிட வேண்டும் என்று செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில் கடைசியாக ஜோதிமணிக்கே அந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. தற்போது அவரும் வெற்றி பெற்று மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் தான் இன்று ஜோதிமணி எம்பி தனது எக்ஸ் பக்கத்தில் இன்று பதிவு ஒன்றை செய்துள்ளார். அந்த பதிவில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியுடன் சேர்ந்து இருக்கும் போட்டோவை அவர் பதிவிட்டு அவரை புகழ்ந்து பேசியுள்ளது அதிக கவனம் பெற்றுள்ளது. இதுதொடர்பாக கரூர் எம்பி ஜோதிமணியின் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
கரூர் நாடாளுமன்ற தேர்தலை இந்தியா கூட்டணியின் சார்பில் களத்தில் முன்நின்று நடந்தி, இரண்டாவது முறையாக மகத்தானதொரு வெற்றியைத் தேடித்தந்த திமுகவின் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர் , சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரையும் நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
இன்னும் ஒருவருக்கு நன்றி சொல்லாமல் இப்பணி முழுமை அடையாது. நேரில் சந்திக்க முடியவில்லை என்றாலும், திமுகவின் கரூர் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர், எந்த சூழலிலும் தனது போர்க்குணத்தைக் கைவிடாத செந்தில் பாலாஜிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலை அதிமுகவின் வெளிப்படையான அராஜகங்கள்,வன்முறைக்கு இடையே அவர் முன்னின்று நடத்தினார். மக்களின் பேரன்போடும்,பேராதரவோடும் ஒரு மகத்தான் வெற்றியை நாங்கள் பெற்றோம். இம்முறை அவர் களத்தில் முன்னின்று தேர்தலை நடத்த முடியவில்லை. பாஜகவின் அராஜகம், அவரை இந்த தேர்தலில் களத்தில் முன் நின்று செயல்படவிடாமல் தடுத்தது.
அவர் நேரடியாக பங்கேற்க முடியவில்லையென்றாலும், கடந்த காலங்களில், அவர் இரவு பகலாக உழைத்து உருவாக்கி,பயிற்சியளித்து, வழிநடத்திய கரூர் மாவட்ட திமுக ,ஒரு படை போல நின்று, அர்ப்பணிப்போடு பணியாற்றி, இந்தியா கூட்டணியை வழிநடத்தி கரூர் மாவட்டத்தில் மீண்டுமொரு மகத்தான வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறது. இந்த வெற்றிக்குப் பின் செந்தில் பாலாஜி அவர்கள் கடந்த காலத்தில் அமைச்சர் பணியோடு சேர்த்து, மாவட்ட செயலாளராக செலுத்திய அசுர உழைப்பும், இடைவிடாத தேர்தல் பணிகளும், அவர் களத்தில் இல்லாத இந்த நேரத்திலும் உறுதுணையாக இருந்தது.
கடந்த முறை வெற்றிச் சான்றிதழை பெறும்போது அவர் அருகில் இருந்தார். இம்முறை இல்லை என்கிற வருத்தமிருந்தாலும், தேர்தல் களத்தில் அவர் இல்லை என்று கொண்டாடியவர்களுக்கு, மக்களின் பேரன்போடும், பேராதரவோடு நாங்கள் இரண்டாவது முறையாக பெற்ற மகத்தான் வெற்றி, பதிலடி தந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி'' என தெரிவித்துள்ளார்.
-
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications