ஃப்ளிப்கார்ட்டில் வாங்கிய வாஷிங் மெஷினில் பிரச்சனை.. கரூர் நுகர்வோர் நீதிமன்றம் சூப்பர் தீர்ப்பு
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் ஃப்ளிப்கார்ட்டில் வாங்கிய வாஷிங் மெஷினில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்து தராத நிறுவனத்தின் விநியோகஸ்தர், பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ. 65,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார்கள் யாரெல்லாம் அளிக்கலாம்..எப்படி நிவாரணம் பெற முடியும் என்பதை பார்ப்போம்.
கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த தாமஸ் குணாளன் என்பவர், 30 ஆயிரத்து 449 ரூபாய்க்கு ஃப்ளிப்கார்ட்டில் வாங்கிய வாஷிங் மெஷின், டெலிவரி ஆன போது, பொருத்த முடியாத அளவிற்கு உடைந்து இருந்ததாம். இதனால் அதிர்ச்சி அடைந்த தாமஸ் குணாளன், வாடிக்கையாளர் சேமை மைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு குறைகளை சரி செய்து தருமாறு கோரிக்கை வைத்தார்.

ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனம் குறைகளை சரி செய்து தரவில்லையாம். இதனால் அதிருப்தி அடைந்த தாமஸ் குணாளன், கரூரில் உள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம், தாமஸ் குணாளனிடம் வாஷிங் மெஷினை மாற்றிவிட்டு, பொருளின் விலையுடன் வட்டி, இழப்பீடு, வழக்கு செலவு தொகை என மொத்தம் 65 ஆயிரத்து 449 ரூபாயை 3 மாதத்திற்குள் ஷோரூம் உரிமையாளர் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதேபோன்ற வழக்கில் வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவு இல்லாமல் பார்சலை டெலிவரி செய்த சோமேட்டோ நிறுவனத்திற்கு ரூ.15 ஆயிரத்து 498 அபராதம் விதித்து திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியைச் சேர்ந்த ஆனந்த் சேகர் என்பவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சோமேட்டோ (Zomato) ஆப்பில், அக்ஷயா பவன் என்ற உணவகத்தில் ஊத்தப்பம், தோசை உட்பட 498 ரூபாய்க்கு உணவு ஆர்டர் செய்துள்ளார்.
இதனை அடுத்து, சோமாட்டோ நிறுவனத்தின் டெலிவரி ஊழியரும் உணவு பார்சலை கொண்டு வந்து கொடுத்துள்ளார். ஆனால், சாப்பிடுவதற்காக பார்சலை பிரித்துப் பார்த்தபோது அவர் ஆர்டர் செய்த மற்ற உணவுகள் இருந்த நிலையில் ஊத்தாப்பம் மற்றும் தோசை இல்லாமல் இருந்திருக்கிறது. ஆர்டர் செய்த தோசையும், ஊத்தாப்பமும் கிடைக்காமல் போனதால் அதிருப்தி அடைந்த சேகர் உடனடியாக சோமாட்டோ வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஆனந்த் சேகர், திருவள்ளூர் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனந்த் சேகர் தொடர்ந்த வழக்கில் திருவள்ளூர் நுகர்வோர் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் விசாரித்தது.. அப்போது சோமாட்டோ நிறுவனம் தரப்பில், "உணவகத்துக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே இடைத்தரகர் போல் செயல்பட்டு, வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவை சம்பந்தப்பட்ட ஹோட்டல் இருந்து வாங்கி கொடுப்பதோடு எங்கள் வேலை முடிந்து விடுவதாக கூறியது. மேலும், பார்சல் போட்டுத் தருவது ஹோட்டல் நிர்வாகம் தான் என்றும் கூறியது. அதற்குள் இருக்கும் உணவுகளின் தரம் சரியாக இருக்கிறதா என்பதை எல்லாம் நாங்கள் சரிபார்க்க முடியாது. இந்த வழக்கில் ஹோட்டல் நிர்வாகத்தை ஒரு தரப்பாக சேர்த்திருக்க வேண்டும்" என்று வாதிட்டது.
இதை ஏற்க மறுப்பு தெரிவித்த திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்ற தலைவர் லதா மகேஸ்வரி, வாடிக்கையாளரிடம் இருந்து சேவை கட்டணமாக ரூ.73 வசூலித்து உள்ளீர்கள். எனவே, சேவை சரியாக வழங்கப்படுகிறதா என்பதை சரி செய்யும் பொறுப்பு சோமாட்டோ நிறுவனத்திற்கு உண்டு என்றார்.. மேலும் மனுதாரரின் ஒப்பந்தம் சோமாட்டோ நிறுவனத்துடன் நேரடியாக இருக்கிறது. அதற்கான சேவை கட்டணத்தையும் மனுதாரர் வழங்கி உள்ளார். எனவே சோமாட்டோ நிறுவனம் தரப்பில் கூறுவது போல உணவகத்தை மற்றொரு தரப்பாக சேர்க்க முடியாது. எனவே, மனுதாரர் உணவுக்காக செலவழித்த ரூ.498-ஐ சோமாட்டோ நிறுவனம் திருப்பிக் கொடுக்க வேண்டும். மேலும், மனுதாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் மற்றும் வேதனைக்காக ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் என மொத்தமாக ரூ.15 ஆயிரத்து 498-ஐ செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இதேபோல் அண்மையில் வேலூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் என்பவர் வக்கீல் ஆவார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் திருப்பத்தூர் -வாணியம்பாடி சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்குக்கு ஆயில் வாங்க சென்றிருக்கிறார். அங்கு ரூ.377 செலுத்தி ஒரு லிட்டர் ஆயிலை வாங்கியிருக்கிறார். அந்த ஆயில் டப்பாவில் ஒரு லிட்டர் ஆயில் வாங்கினால் அரை லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று எழுதியுள்ளார்கள்.
இதைப்பார்த்த வக்கீல் விஜயகுமார் அரை லிட்டர் பெட்ரோல் தாருங்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால் அங்கிருந்தவர்கள் அவருக்கு பெட்ரோல் கொடுக்கவில்லை. விளம்பரத்தை பார்த்து ஆயில் வாங்கியதால் வேறு பணம் இல்லாததால் பெட்ரோல் போடாமல் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளை தள்ளிக்கொண்டே விஜயகுமார் சென்றாராம். இதனால் அவர் மனஉளைச்சலுக்கு ஆளாகினாராம்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க் மீது வக்கீல் விஜயகுமார் வேலூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி மீனாட்சி சுந்தரம் விசாரணை செய்தார். விளம்பரத்தில் உள்ளபடி விஜயகுமாருக்கு பெட்ரோல் வழங்கப்படவில்லை. இது வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வகையில் உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் வழக்கு தொடர்பாக நீதிபதி அளித்த தீர்ப்பில், பெட்ரோல் பங்க் மற்றும் ஆயில் டீலர் ஆகியோர் சேர்ந்து தலா ரூ.25 ஆயிரம் மற்றும் வழக்கு செலவின தொகையாக தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.70 ஆயிரம் இழப்பீடாக விஜயகுமாருக்கு வழங்க வேண்டும் என்றும், மேலும் அந்த ஆயில் டீலர்ஷிப்பை பெட்ரோல் பங்க் ரத்து செய்ய நடவடிக்கை வேண்டும் என்று கூறினார்.
இந்த மூன்று சம்பவங்களுமே நுகர்வோர் குறைதீர் சட்டத்தின் கீழ் நிவாரணம் பெற்ற வழக்குகள் ஆகும். நுகர்வோர் சட்டப்படி நுகர்வோர் பெறும் பொருட்கள் மற்றும் சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள், புகார்கள் இருந்தால் நுகர்வோர் குறைதீர் ஆணையம் மூலம் இழப்பீடு பெற முடியும். ஒரு குறை எழுந்து இரண்டு ஆண்டுகள் வரை புகார்களை பதிவு செய்யலாம். இரண்டு ஆண்டுகளைக் கடந்த புகார்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது.நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள் 90 நாட்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.
எனினும் கோர்டில் புகார் பதிவு செய்வதற்கு முன்பாக பாதிக்கப்பட்டவர் எதிர்தரப்புக்கு தங்களுடைய குறைகளையும் அதற்கு அவர்கள் கோரும் தீர்வுகளையும் விவரித்து முதலில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். நுகர்வோர் ஆணையத்திற்கு செல்வதற்கு முன்பாக பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு பெறுவதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது. நோட்டீஸுக்கு பதில் வரவில்லையென்றால் நுகர்வோர் சட்டத்தின் கீழ் உரிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் போதிய ஆதாரங்களுடன் புகார் பதிவு செய்யலாம்.ரூ. 1 கோடி வரை இழப்பீடு கோரும் புகார்களை உங்கள் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பதிவு செய்யலாம். ரூ. 1 கோடியிலிருந்து 10 கோடி வரை இழப்பீடு கோரும் புகார்களை மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். ரூ. 10 கோடிக்கும் மேல் இழப்பீடு கோரும் புகார்களை தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பதிவு செய்ய முடியும்.
கடைகளில், ஓட்டல்களில் எம்.ஆர்.பி குறிப்பிடாமல் பொருட்களை விற்பது, எம்.ஆர்.பிக்கு அதிகமாக பொருட்களை விற்பது, குறிப்பிட்ட சேவைகளை சரிவர வழங்காமல் இருப்பது, காப்பீடு நிறுவனங்கள் சரியாக காப்பீடு வழங்காமல் இருந்தால், தனியார் மருத்துவ சேவைகளில் எழும் குறைகள், வங்கி பரிவர்த்தனைகளில் ஏற்படும் புகார்கள் எனப் பல தரப்பட்ட புகார்களுக்கு நுகர்வோர்கள் நிவாரணம் பெற முடியும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications