சீமான் மீது வழக்கு பதிவு செய்து விசாரிங்க.. போலீசாருக்கு கரூர் நீதிமன்றம் உத்தரவு!
கரூர்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட பட்டியல் சாதி குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக தான்தோன்றிமலை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த கரூர் குற்றவியல் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
கரூரை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் என்பவர் கரூர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பும் நோக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருவதாக குற்றம்சாட்டி இருந்தார்.

மேலும், குறிப்பிட்ட பட்டியல் சாதியை அவதூறாக விமர்சிக்கும் வகையில் சாதி குறித்த வார்த்தையைச் சொல்லி சீமான் பேசியுள்ளார். எனவே சீமான் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட பட்டியல் ஜாதி குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. தான்தோன்றிமலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க கரூர் குற்றவியல் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications