"ஹெல்மெட் இல்லைனா.. பெட்ரோல் முதல் மதுபானம் வரை எதுவுமே இல்லை.." கரூர் ஆட்சியர் அதிரடி! முழு விவரம்
கரூர்: கரூர் மாவட்டத்தில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
நாளுக்கு நாள் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விபத்துகளின் போது உயிரிழப்புகளைத் தடுக்க தலைக்கவசம் முக்கியம் என்பதால் தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க அம்மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ஆலோசனை
இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

புரிந்து கொள்ள வேண்டும்
சாலை விபத்துகளில் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் மாவட்டமாகக் கரூர் உள்ளது வருத்தத்திற்குரியதாக உள்ளதாகத் தெரிவித்த ஆட்சியர் பிரபுசங்கர், இந்த உயிரிழப்புகள் அனைத்தும் தலைக்கவசம் அணியாமல் சென்றதால் ஏற்பட்டுள்ளது என்றும் தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற தொடரில் இருக்கும் ஆழமான அர்த்தத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஹெல்மெட் கட்டாயம்
உலகிலேயே விலைமதிப்பில்லாதது மனித உயிர்கள் என்பதால் வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார். இகு தொடர்பாக அவர் கூறுகையில், "வரும் 18-ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், டாஸ்மார்க் கடைகள் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தலைக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் எவருக்கும் எந்த ஒரு சேவையும் வழங்கப்பட மாட்டாது

எந்த சேவைகள் இல்லை
இது குறித்து அனைத்து பகுதிகள், நிறுவனங்களின் முகப்புகளில் அறிவிப்புப் பலகை வைக்கப்படும். இச்செய்தி குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெட்ரோல் பங்குகளில் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது. அரசு மதுபான கடைகளில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்குக் கட்டாயம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் இரு சக்கரங்களில் வருபவர்கள் தலைக்கவசம் அணியாவிட்டால் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது.,

கண்டிப்பான உத்தரவு
ஐஎஸ்ஐ முத்திரையுடன் கூடிய தலைக் கவசங்களை அணிய வேண்டும். மேலும் கரூர் மாவட்டத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தற்போது வரை தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள் 75,534 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இரு சக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் தலைக்கவசம் அணிந்து வருகின்றார்கள் என்ற நிலையை உருவாக்க வரும் 18 முதல் அனைத்து பகுதிகளும் இத்திட்டம் மிகவும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அனைவரும் அளிக்க வேண்டும்" என்றார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications