இப்படியும் ஒரு உடற்கல்வித் துறை இயக்குநரா?.. வைரலாகும் வீடியோ.. குவியும் பாராட்டுகள்
கரூர்: இப்படியும் ஒரு உடற்கல்வித்துறை இயக்குநரா ? கரூர் அரசு கலைக் கல்லூரியின் உடற்கல்வித்துறை இயக்குநர் ராஜேந்திரனின் செயல் சமூக நல ஆர்வலர்களது பாராட்டுகளை பெற்று வருகிறது.
Recommended Video
அரசுக் கலைக் கல்லூரி என்றாலே ஏதேனும் சாதனை தான், ஒன்று படிப்பில் மற்றொன்று விளையாட்டில் இது போன்ற சமயத்தில் கொரோனாவால் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதெல்லாம் முடிந்து தற்போது தான் கல்லூரிகளில் ரெகுலர் வகுப்புகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் தாங்கள் பயிலும் கல்லூரியை தாங்கள் தான் தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென்று அவ்வப்போது மாணவ, மாணவிகளிடம் அட்வைஸ் செய்து வரும் கரூர் அரசு கலைக் கல்லூரியின் உடற்கல்வித்துறை இயக்குநர் ராஜேந்திரன் எப்போதுமே மாணவர்களுக்கு ஒரு ரோல் மாடலாகவும், எடுத்துகாட்டாகவும் விளங்கி வருகிறார்.

தான்தோன்றிமலை
கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியின் வளாகத்தில் முன்புறம் டூ விலர்கள் நிறுத்தும் இடம் மற்றும் அவ்வழியாக செல்லும் சாலையின் ஓரத்தில் புற்கள் மற்றும் வேஸ்ட் பேப்பர்கள் கொட்டப்பட்டு குப்பைகளாக இருந்ததை கண்ட கல்லூரியின் உடற்கல்வித் துறை இயக்குநர் ராஜேந்திரன், உடனே அங்கிருந்து மம்பட்டியை எடுத்து தூய்மைப்படுத்தும் பணியினை துவக்கினார்.

சமூகநல ஆர்வலர்கள்
எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் துவங்கிய இந்த பணியினை அங்குள்ள சமூக நல ஆர்வலர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். அதே போல, உடற்கல்வித்துறை இயக்குநரே தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளார் என்று கருதி, மாணவர்களும் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே அசுத்தம் செய்வது தான் அரசு கலைக்கல்லூரியா? என்பதை மாற்ற ஒரு ரோல் மாடலாக கரூர் அரசு கலைக் கல்லூரியின் உடற்கல்வித்துறை இயக்குநரின் செயல் பல்வேறு தரப்பினரின் பாராட்டுதலை பெற்று வருகிறது.

தூய்மை
மேலும், இந்த உடற்கல்வித் துறை இயக்குநர் ராஜேந்திரன் மற்றும் மாணவர்கள் அந்த இடத்தை தூய்மைப்படுத்தி வரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, இது போன்று தமிழகத்தில் உள்ள மற்ற அரசு கலைக் கல்லூரிகளில் நடந்தால் தூய்மை இந்தியா என்ற திட்டம் முழுமையடையும் என்கின்றனர் நடுநிலையாளர்கள். அதுமட்டுமில்லாமல், விளையாட்டுத் துறையில் உள்ள அனைத்து மாணவர்களை ஊக்குவிப்பது, விளையாட்டிற்காக செல்லும் மாணவ, மாணவிகளுக்கு உதவி செய்வதும், விளையாட்டிற்கு தேவையான பொருட்களை அவரது சொந்த செலவில் வாங்கி கல்லூரிக்கு கொடுப்பதும் இவரது இயல்பாகும்.

விளையாட்டு பிரிவு
மேலும், தமிழகத்தில் உள்ள 153 அரசு கலைக்கல்லூரியில் இன்றைக்கு கரூர் அரசு கலைக் கல்லூரிதான் விளையாட்டு பிரிவில் தேசிய அளவிலும், மாநில அளவிலும், கல்லூரிகள் அளவிலும் சரி முதலிடம் பிடித்து வருவதோடு, இதற்கு முழு மூச்சாக இருந்து வரும் உடற்கல்வித்துறை இயக்குநர் ராஜேந்திரனை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications